சர்க்கரை நோயாளிகள் இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடலாமா?
Chapati At Night For Diabetes Patients : சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் இரவு நேரத்தில் கோதுமை சப்பாத்தி சாப்பிடலாமா கூடாதா என்பதை பற்றி இங்கு காணலாம்.

சர்க்கரை நோயாளிகள் இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடலாமா?
சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சினையாகி விட்டது. குழந்தைகள் முதல் பெரிய வயதானவர்கள் வரை என அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். மோசமான உணவு பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை தான் இதற்கு முக்கிய காரணம். ஒரு நபருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் பல கடுமையான நோய்களையும் கூடவே அழைக்கும். இதனால் கண், சிறுநீரகம் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா?
இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நல்ல உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு இரவு நேரத்தில் கோதுமை சப்பாத்தி சாப்பிடலாமா.. கூடாதா..? என்று கேள்வி மனதில் எழும். இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வேப்பிலை '4' போதும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த; எப்படி சாப்பிடனும் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள் இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, கோதுமையில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு உடலின் ஆற்றலை பராமரிக்க கார்போஹைட்ரேட்டுகள் தேவை என்றாலும்,நீங்கள் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சர்க்கரை நோயாளிகள் இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் வெல்லம் கலந்த டீ குடிக்கலாமா? உண்மை என்ன?
சர்க்கரை நோயாளிகள் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- கோதுமையில் சர்க்கரை உள்ளடக்கம் உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.
- கோதுமையில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இது சாப்பிட்டால் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும்.
- கோதுமையில் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால், இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
எந்த மாவில் சப்பாத்தி சாப்பிடலாம்?
சர்க்கரை நோயாளிகள் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக பார்லி மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம் இது உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும். நீங்கள் விரும்பினால், ராகி மாவு கொண்டைக்கடலை மாவு, ஓட்ஸ் போன்றவற்றிலும் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.
குறிப்பு : ஒருவேளை நீங்கள் இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட விரும்பினால், அதனுடன் பனீர் அல்லது பாசிப்பருப்புடன் சேர்த்து சாப்பிடுங்கள். ஆனால், 2 சிறிய சாப்பாத்தி மட்டும் சாப்பிடுங்கள்.