தண்ணீர் குடிக்க பயந்தால்.. ஆயுட்காலம் குறையும் - தெரியுமா உங்களுக்கு..?
உங்கள் உடல் நிறைய தண்ணீரை இழக்கும்போது, உடலில் இருக்கும் சீரம் சோடியம் அளவு அதிகரிக்கும். இது பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
நம் உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உண்மையில், தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உடல் முதுமையை அடையும் மற்றும் சருமப் பிரச்சனைகள் தோன்றும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், நீரிழப்பு மூலம் முதுமையை விரைவுபடுத்துகிறது.
செரிமான செயல்முறையை எளிதாக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கொழுப்பைக் கரைக்கவும், நீரிழப்பைத் தடுக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். உடலில் போதுமான அளவு தண்ணீர் அருந்தாதது உடலில் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். இது சருமத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இதெல்லாம் தெரிந்தாலும்.. பலருக்கு தண்ணீர் குடிக்கவே பிடிப்பது கிடையாது.
நமது உடலின் திரவ அளவு குறையும் போது சீரம் சோடியம் அளவு கடுமையாக உயர்கிறது. இது நாள்பட்ட நோய்கள் மற்றும் அகால மரணத்திற்கு வழிவகுக்கிறது. இந்த முடிவுகள் அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. அதிக சீரம் சோடியம் அளவு உள்ளவர்களுக்கு நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதையும் ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உடலில் சீரம் சோடியம் அளவு 142க்கு மேல் இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம், வாஸ்குலர் நோய், நுரையீரல் நோய், சர்க்கரை நோய், டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயது, பாலினம், புகைபிடித்தல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சீரம் சோடியம் அளவை பாதிக்கும் பிற காரணிகள் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் எந்த பரிந்துரையும் இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.