- Home
- உடல்நலம்
- Ramadan 2025 : ரமலான் நோன்பு இருக்கீங்களா? உங்கள ஃபிட்டாக வைத்திருக்க பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
Ramadan 2025 : ரமலான் நோன்பு இருக்கீங்களா? உங்கள ஃபிட்டாக வைத்திருக்க பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
Ramadan Fasting 2025 : நீங்கள் ரமலான் நோன்பு இருக்கிறீங்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் பின்பற்றினால் போதும். எப்போதும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.

ரமலான் நோன்பு இருக்கீங்களா? உங்கள ஃபிட்டாக வைத்திருக்க பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
ரமலான் மாதம் என்பது இஸ்லாம் மதத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய நோன்பின் மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, 9வது மாதம் தான் ரமலான் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரமலான் மாதம் என்பது வெறும் நோம்பு மட்டும் இருக்க மட்டுமல்ல, ஆன்மீக தூய்மை, சுயக்கட்டுப்பாடு மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்கும் ஒரு சிறந்த நேரமும் கூட என்று சொல்லலாம். ஒரு மாதம் இருக்கும் ரமலான் நோன்பை உலகளவில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் கடைப்பிடிப்பார்கள். உங்களுக்கு தெரியுமா.. ரமலான் நோன்பு உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ரமலான் நோன்பு இருக்கிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் உங்களது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளனர், அவற்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள் அதிகமாக இருப்பீர்கள்.
முன்கூட்டியே தயாராவது..
- ரமலான் நோன்பிற்கும் முன்பே உங்களது தினசரி வழக்கம் மற்றும் உணவு முறையை சரி செய்யுங்கள்.
- நோன்பின் ஆரம்பத்தில் தலைவலி வராமல் இருக்க டீ, காபி குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
- நோன்பிற்கு ஏற்ப சாப்பிடும் மற்றும் குடிக்கும் நேரத்தை மாற்ற தொடங்கவும்.
- விரதத்தை முடித்த பிறகு லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
நீரேற்றமாக இருக்கவும்:
- நோன்பு இருக்கும் சமயத்தில் உங்களது உடலை நீரேற்றமாக வைப்பது ரொம்பவே முக்கியம் என்பதால், உண்ணாவிரதத்திற்கு இடையில் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
- சூக்கள், மற்றும் தேங்காய் தண்ணீர் நல்ல தீர்வாகும்.
- சர்க்கரை பானங்கள், குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை உங்களது உடலை நீரிழிப்புக்கு வழிவகுக்கும்.
- தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்ற அதிக நீர் சத்துக் கொண்ட பழங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: தொடங்குகிறது ரமலான் நோன்பு.! இஸ்லாமியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும்:
- ரமலான் நோன்பு சமயத்தில் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பது மட்டுமின்றி எடையும் குறையும். எனவே புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். உதாரணமாக முட்டை, சீஸ், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் போன்றவையாகும்.
- பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுங்கள். இவை செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது.
- வறுத்த அல்லது பொறித்த உணவுகளுக்கு பதிலாக, ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள் மற்றும் அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: ரம்ஜான் 2025 எப்போது? இந்தியாவில் ரமலான் மாதம் எப்போது தொடங்கும்?
அதிகம் சாப்பிடாதே!
- ரமலான் நோன்பின் சமயத்தில் நிறைய சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது பொதுவானது. ஆனால் அது உங்களது வயிற்றை கனமாக்கி, செரிமான பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது தான் நல்லது.
- நோன்பு முடிக்கும் சமயத்தில் தண்ணீர் மற்றும் பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள்.
- இரவு நேரத்தில் லேசான மற்றும் சீரான உணவை சாப்பிடுங்கள். அதிகமாக சாப்பிட வேண்டாம்.
- தயிர் உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுகளை சாப்பிடுங்கள்.
லேசான உடல் செயல்பாடுகள் செய்யவும்:
ரமலான் மாதத்தில் உடனே சுறுசுறுப்பாக வைக்க லேசான உடல் செயல்பாடுகளை செய்யுங்கள் இதற்கு நீங்கள் நடைபெற்று அல்லது யோகாசனங்கள் செய்யலாம் குறிப்பாக பகலில் உடற்பயிற்சி செய்வது ரொம்பவே நல்லது. இதனால் உங்களது உடலும் ஆரோக்கியமாக இருக்கும், எடையும் கட்டுப்படுத்தப்படும்.