MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • படர்தாமரை வந்தால் வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி? ஒரே 1 துண்டு மஞ்சள் போதும்!!

படர்தாமரை வந்தால் வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி? ஒரே 1 துண்டு மஞ்சள் போதும்!!

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே படர்தாமரையை எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று இங்கு காணலாம்.  

2 Min read
Author : maria pani
Published : Jun 20 2023, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உங்களுக்கு படர்தாமரை, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவை உங்களை மட்டுமின்றி உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. படர்தாமரை என்பது தோலில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றாகும். படர்தாமரை வந்தால் மீண்டும் சருமத்தின் மீது சொறிந்து கொள்ள தோன்றும். இதனால் தடிப்புகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய கைவைத்தியத்தை இங்கு காணலாம். 

25

யாருக்கு ஏற்படும்? 

அதிக எடை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கு படர்தாமரை வரலாம். நாய், பூனை போன்றவை மூலம் மனிதர்களுக்கு வரலாம். மனிதர்களிடம் இருந்தும் மனிதர்களுக்கு பரவலாம். அதாவது ஏற்கெனவே படர்தாமரை பாதித்தவரிடம் இருந்து பிறருக்கு 1முதல் 3 வாரங்களில் பரவ வாய்ப்புள்ளது. 

35

படர்தாமரைக்கு வேம்பு 

வேப்ப மரத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இது சரும அரிப்புக்கு நல்மருந்தாக செயல்படும். வேப்பிலையை அரைத்து, அரிப்பு உள்ள இடங்களில் தடவுங்கள். இந்த இலைகளுக்கு பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உண்டு. 

மஞ்சள்

மஞ்சள் சருமம் தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாக அழைக்கப்படுகிறது. ஒரு துண்டு மஞ்சளை தண்ணீரில் கலந்து அதை பேஸ்ட் போல செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி விடுங்கள். அது காய்ந்து போகும் வரை அப்படியே விடுங்கள். இப்படி சில நாள்கள் செய்தால் அரிப்பும் நீங்கும். 

45

படர்தாமரைக்கு தேங்காய் எண்ணெய்: 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் பல நோய்களுக்கு எதிராக செயல்படும். எலுமிச்சம்பழம் மற்றும் நல்லெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து கொள்ளுங்கள். இதை அரிப்பு உள்ள இடத்தில் தடவினால், விரைவில் பிரச்னை நீங்கும். குறிப்பாக சுகாதார நிபுணர்களும் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். 

இதையும் படிங்க: தொப்பையை கரைக்கும்... மாதவிடாய் வலியை நீக்கும்... உஷ்த்ராசனம் எப்படி செய்யனும் தெரியுமா?

55

சாமந்திப்பூ: 

பொதுவாக சாமந்தி பூவை திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பூவை வைத்து படர்தாமரை, சரும அரிப்பு ஆகியவற்றை நீக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பூவில் ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும். 

ஆவாரம் பூ: 

காசியா அங்கஸ்டிஃபோலியா என்றும் அழைக்கப்படும் ஆவாரம் பூச்செடியை வைத்து படர்தாமரையை கட்டுப்படுத்தலாம். இந்த செடியை அரைத்து, படர்தாமரை அரிப்பு உள்ள இடங்களில் தடவுவதன் மூலம் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

இதையும் படிங்க: பேரழகை பெற முகத்தில் பாம்பு மசாஜ்... விசித்திரமான 7 அழகு சிகிச்சைகள்!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!
Recommended image2
மாரடைப்பு வராமல் தடுக்க, இந்த 9 வகை மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.!
Recommended image3
உங்களை சுற்றி இருக்கும் இந்த நபர்களால் முதுமை தோற்றம் வருமாம்.! இவர்களிடம் எச்சரிக்கையா இருங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved