MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Sweat: வியர்க்குருவை விரட்டியடிக்க இதோ சூப்பரான ஒரு டிப்ஸ்!

Sweat: வியர்க்குருவை விரட்டியடிக்க இதோ சூப்பரான ஒரு டிப்ஸ்!

கோடைகாலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்பொழுதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. கோடை வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனில், அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். மேலும், தேவையின்றி வெயிலில் செல்வதை தவிர்க்கவும் வேண்டும். வெயில் காலங்களில் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு பிரச்சனை என்றால் அது வியர்க்குரு தான்.   

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 25 2023, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

எரிச்சலை உண்டாக்கும் வியர்க்குரு

பொதுவாக கோடைகாலத்தில், வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரைக்குமே பிரச்சனையாகத் தான் இருக்கும். வியர்க்குரு வந்து விட்டால், அது சருமத்தை ஊசியால் குத்துவது போல் இருப்பது மட்டுமன்றி, எரிச்சலையும் தரும். வியர்க்குரு வந்தால், உடல் முழுவதிலும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறி விடும். சிலருக்கு முகத்திலும் வியர்க்குரு வரும். அச்சமயங்களில், அவர்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காட்டுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வியர்க்குருவைப் போக்க கடைகளில் விற்கும் பவுடர் மற்றும் கிரீம் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படி பணத்தை வீணாக்காமல் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் வெயிலிலும், வியர்க்குருவிலும் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இருப்பினும் பலரும் காய்கறிகளை சரியான அளவில் சாப்பிட மாட்டார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு வியர்க்குருவை விரட்ட உதவும் சூப்பரான ஒரு டிப்ஸைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

35

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் துண்டுகள் - 5
கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி அதனை நன்றாக மசித்து எடுக்க வேண்டும். இதனுடன் கற்றாழை ஜெல்லைக் கலந்து, நன்றாக குழைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் படும்படி தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு இந்த மாஸ்க் காய்ந்ததும், குளிர்ச்சியான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். தினந்தோறும் ஒரு வேளை மட்டும் இதனைச் செய்தால் போதும். 

45
hot Summer

hot Summer

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடுவதும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதனால், வெயிலில் இருந்து பாதுகாப்பு மட்டுமின்றி, நம் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்தந்த காலநிலையில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்த் தாக்குதல் எதுவுமே இருக்காது.

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

55

பக்கவிளைவுகள் உண்டா?

​கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, சருமத்தில் ஒரு பேட்ச் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் பக்கவிளைவைகளை உண்டு செய்யாது. அனைவருமே இதனைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்த வேண்டும்.  

About the Author

DT
Dinesh TG
கோடைக்காலம்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(10.4 ov)108/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 84 runs in 56 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image2
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image3
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved