சக்கரை நோயாளிகள் அடிக்கடி சீஸ் சாப்பிடலாமா?
தினமும் அதிக அளவு சீஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் இருதய நலனுக்கு பாதிப்பை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எல்லோரும் சீஸ் சாப்பிட மிகவும் பிடிக்கும். இதில் இருக்கும் சீஸ் புரதம், கால்சியம், சோடியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடல்நலனுக்கு முக்கியமாக தேவை. இருப்பதிலேயே மென்மையான சீஸ் தான் சிறந்தது. அதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் நல்லது. அதேபோன்ற பாலாடைக்கட்டியை சாப்பிட்டவுடன் உடலுக்கு தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கிறது. அதில உடலுழைப்பு கொண்ட பணிகளை மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் போன்றோர் தங்களுடைய உணவுப் பழக்கத்தில் சீஸ் சாப்பிடுவதை வழக்கமாக்குவது மிகவும் நல்லது.
ஆனால் பாலாடைக்கட்டியில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் இருப்பதால், சீஸ் அளவோடு சாப்பிடுவது நல்லது. தினமும் அதிக அளவு சீஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதன்மூலம் இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சீஸ் அதிகம் சாப்பிடக்கூடாது என்பதும் அவர்களுடைய கருத்தாக உள்ளது. எனினும், இதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்.
சீஸ் என்பது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். சீஸில் கால்சியம், கொழுப்பு, புரதம், சோடியம், பாஸ்பேட், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி12 போன்றவை உள்ளன. எனவே சீஸ் சாப்பிடுவது உடலுக்கு வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துக்களை உடனடியாக பெற உதவுகிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
சீஸ் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியம். எனவே கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த சீஸ் சாப்பிடுவது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்திகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பொருட்களில் ஒன்று சீஸ். அவை புரோபயாடிக் பண்புகள் மற்றும் வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கிளைசெமிக் குறியீடு குறைந்து காணப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சீஸ் பெரிதும் உதவுகிறது.
மூளை ஆரோக்கியம் பெறும்
இயற்கை கொழுப்பின் நல்ல ஆதாரம், பாலாடைக்கட்டியின் மிதமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உணவில் சீஸ் சேர்த்துக் கொள்வது மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இதையும் படிங்க: அசைவ உணவுகளால் எலும்பு பாதிக்குமா? நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்