பெண்களே! 30 வயதை கடந்த பின் இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க! எடை கிடுகிடுனு ஏறிடும்
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எடை அதிகரிப்பதை தடுக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.

Foods To Avoid For Women Over 30
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதிப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், ஹார்மோன் மாற்றங்கள், அதிக கார்போ உணவுகள், உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய் போன்ற நிறைய காரணங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் 30 வயதை தாண்டிய நபராக இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்கவும். ஏனெனில் அவை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், உடல் சார்ந்த பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக நீங்கள் 30 வயது கடந்து பெண்களாக இருந்தால் மிகவும் கவனமாக இருங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
30 வயது கடந்த பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் தேவையற்ற கூடுதல் சர்க்கரைகள், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் ஹார்மோன் பிரச்சனை, குடல் ஆரோக்கியம், எலும்புகள், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
கார்பன் பானங்கள்
30 வயது கடந்த பெண்கள் உடல் அதிகரிப்பதை தவிர்க்க அதிக சர்க்கரை கொண்ட கார்பன் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோல சர்க்கரை சேர்க்கப்படும் பால், டீ, காபி ஆகியவற்றையும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் சர்க்கரை சேர்க்காமல் டீ, காபி குடிக்கலாம். இது தவிர மூலிகை டீ, பானம் போன்றவற்றை குடிக்கலாம்.
பாப் கார்ன்
அதிக உப்பு, வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் பாப்கான்களை 30 வயது கடந்த பெண்கள் கட்டாயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பாப்கான் தயாரிக்க செயற்கை பொருட்கள் பயன்படுத்துவதால் அவை உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
சிப்ஸ்
பாக்கெட் சிப்ஸ்களில் சுவையை அதிகரிக்க சோடியம் உள்ளிட்ட பல செயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அவை சிப்ஸை கெட்டுப் போகாமல் வைக்கும் மற்றும் முறுமுறுப்பாகவும் மாற்றும். எனவே இந்த வகையான சிப்ஸ்களை 30 வயது கடந்த பெண்கள் கட்டாயம் சாப்பிடுவதை தவிர்க்கவும். சிப்ஸ் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
தயிர்
தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது தானே. ஏன் இந்த லிஸ்டில் தயிரும் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? உண்மையில் தயிர் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது தான். ஆனால் அதை அதிகமாக தான் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக தயிரில் உப்பு, சர்க்கரை போன்றவற்றை கட்டாயம் சேர்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அவை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் நீங்கள் தயிருக்கு பதிலாக மோர், யோகர்ட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மயோனஸ்
மயோனஸில் அதிக அளவு சோடியம் உள்ளதால் அவை உடலை பாதிக்கும். இதனால் மூட்டுகளில் வலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். எனவே மயோனஸ் ஸ்கெட்ச் போன்றவற்றை தவிர்க்கவும்.