MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • கர்ப்பிணி பெண்கள்: மறந்தும் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்! பின் தேவையற்ற மன உளைச்சல் தான் வரும்!

கர்ப்பிணி பெண்கள்: மறந்தும் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்! பின் தேவையற்ற மன உளைச்சல் தான் வரும்!

கர்ப்பமாக உள்ள போது பெண்கள் தங்கள் உணவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Dinesh TG
Published : Apr 03 2023, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பெண்கள் கருத்தரித்த நாளிலிருந்து பிரசவ காலம் வரை தங்கள் வயிற்றினுள் வளரும் குழந்தையின் நலனை காக்கும் விதத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்து எடுத்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த செய்யும் விதத்தில் இருத்தல் வேண்டும்.

ஆக மகப்பேறு காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக உன்னதமான மற்றும் முக்கியமான காலமாகும். பெண்களின் வாழ்க்கை சுழற்சியில் முக்கியமான பகுதி என்றும் கூறலாம்.

கர்ப்பமாக உள்ள போது பெண்கள் தங்கள் உணவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.அவ்வாறு கர்ப்பிணிகள் எந்த உணவுகளை  தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் கர்ப்பக்காலத்தை ஆரோக்கியமான முறையில் வழி நடத்திட உதவும்.

24

காய்ச்சாத பால்:

காய்ச்சாத பால் சேர்த்து செய்யப்படும் மில்க் ஷேக், ஸ்மூத்தி, ஐஸ்கிரீம் போன்றவற்றை தயாரிக்க முடியும்.ஆகவே இம்மாதிரியான உணவுகளையும் தவிர்ப்பதால் பாக்டீரியாக்களின் பாதிப்பையும் நாம் குறைக்கலாம்.

கெஃபைன்( caffine )

சாஃப்ட் டிரிங்க்ஸ், காபி, டீ ஆகியவற்றில் கெஃபைன் கலந்திருப்பதால் அவற்றை எல்லாம் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். இந்த கெஃபைன் வயிற்றில் உள்ள குழந்தையை மிகவும் பாதிக்கும்.

மீந்து போன உணவுகள்:

வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவுகளை மறுமுறை சூடு செய்தோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ சாப்பிடக் கூடாது. உணவைத் தயாரித்த 4 மணி நேரத்திற்கு மேல் சாப்பிடக் கூடாது.

34

பச்சை முட்டை:

சிலர் பச்சை முட்டையை சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தரித்து விட்டால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமைக்கப் படாத முட்டையில் சால்மெனெல்லா என்ற கிருமிகள் குடில் உள்ளதால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தவிர விதமான சாஸ், மயோனைஸ், ஹோம்மேட் ஐஸ்கிரீம், கேக் ஐசிங் ஆகியவற்றில் பச்சை முட்டை கலந்து இருக்கும். ஆக வேக வைத்த முட்டையை சாப்பிடுவதே மிகச் சிறந்தது.

குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்:

பப்பாளியில் அதிக அளவில் லேடக்ஸ் காணப்படுவதால் யூட்டரினில் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. தவிர கருப்பு திராட்சை , பைன் ஆப்பிள் போன்றவை வயிற்றின் சூட்டை அதிகரிக்கலாம். இதனால் இதனை தவிர்த்தல் அவசியமாகிறது.
மேலும் வேகவைக்காத முட்டைக்கோஸ் மற்றும் லெட்யூஸ் இலைகளில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

நோய்,திருஷ்டி,தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள் என்னென்ன?யார் அணியலாம்?என்ன பலன்கள் பார்க்கலாம்

44

ஆல்கஹால்:

சில பெண்கள் ஆல்கஹால் அருந்தும் பழக்கம் கொண்டவர்களாகஇருப்பார்,. அவர்கள் இப்படி கருவுற்றுள்ள போது கட்டாயமாக தவிர்த்தல் வேண்டும். ஆல்கஹால்எடுத்துக் கொண்டால் கரு கலைப்போ அல்லது குழந்தையின் மூளையோ பாதிப்பு அடையலாம் .

முளைக்கட்டிய தானியங்கள்:

ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளைக்கட்டிய தானியங்களை பல்வேறு சத்துக்கள் உள்ளன எனினும் கண்களுக்கு புலப்படாத பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் அவற்றை வேக வைத்து சாப்பிடு சிறந்தது

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்:

ஸ்வீட்டான டிரிங்க்ஸ்,டெசர்ட், கேண்டி, கேக், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் வாந்தி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், எடை அதிகரிக்கக் கூடும் . இதனால் உடல் எடை அதிகரிக்கும் போது சிஸேரியன் மூலம் தான் குழந்தை எடுக்க வேண்டிய சூழல் இருக்கும்.

தவிர கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வருதல், குறை பிரசவம், கருவின் மெட்டபாலிக் சிண்ட்ரோம் பாதிப்பு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கருப்பட்டி, வெல்லம், பணங்கற்கண்டு போன்றவற்றால் செய்த இனிப்புகளை எடுத்துக் கொள்வதால் நீரழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved