MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Ear health tips: தினமும் Earphone-ல் பாட்டு கேட்கிறீங்களா? காதுகளை காப்பாற்றும் Simple Tips!

Ear health tips: தினமும் Earphone-ல் பாட்டு கேட்கிறீங்களா? காதுகளை காப்பாற்றும் Simple Tips!

Ear health tips: தினமும் Earphone பயன்படுத்துகிறீர்களா? அதிக Volume மற்றும் நீண்ட நேர பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க 5 முக்கியமான பாதுகாப்பு Tips-ஐ தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 06 2026, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தினமும் Earphone பயன்படுத்துகிறீர்களா?
Image Credit : pinterest

தினமும் Earphone பயன்படுத்துகிறீர்களா?

காலை எழுந்ததும் பாட்டு கேட்க, வீடியோ பார்க்க, ஆன்லைன் மீட்டிங்கில் பேச, பயணம் செய்ய என இன்று Earphone நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கியமான சாதனமாகிவிட்டது. பலர் தினமும் பல மணி நேரம் Earphone பயன்படுத்துகிறார்கள். ஆனால், எவ்வளவு சத்தத்தில் கேட்கிறோம் எவ்வளவு நேரம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்? என்பதில் கவனம் இல்லையென்றால், அது காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உலக சுகாதார அமைப்பு (WHO), பாதுகாப்பான முறையில் இசை மற்றும் பிற ஆடியோவை கேட்பதற்கு சில வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. குறிப்பாக, அதிக சத்தத்தை நீண்ட நேரம் கேட்பதை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Volume-ஐ 60%-க்கு மேல் அதிகரிக்காதீங்க!
Image Credit : pinterest

Volume-ஐ 60%-க்கு மேல் அதிகரிக்காதீங்க!

Earphone-ல் பாட்டு அல்லது வீடியோ கேட்கும்போது, சத்தம் குறைவாக இருப்பதாக நினைத்து Volume-ஐ முழுவதுமாக உயர்த்துவது பலருடைய பழக்கம். ஆனால் இதுதான் காதுகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

WHO பரிந்துரைப்படி, மொபைல், லேப்டாப் அல்லது வேறு எந்த சாதனத்தில் Earphone பயன்படுத்தினாலும், Volume-ஐ அதிகபட்சமாக 60%-க்கு மேல் வைக்காமல் இருப்பது நல்லது. எளிமையாகச் சொன்னால், Earphone போட்டவுடன் அருகில் இருப்பவர் பேசுவது கூட கேட்கவில்லை என்றால், Volume அதிகமாக இருக்கலாம். சத்தத்தை குறைத்து கேட்பது நல்லது.

Related Articles

Related image1
Tech Neck : போன், லேப்டாப் பயன்பாட்டால் கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு ஏற்படும் பாதிப்புகள்!
Related image2
Tech உலகில் அடுத்த ட்ரெண்ட்: வேற லெவல் டிசைனில் வெளியாகும் நத்திங் போன் 4a பிங்க் வேரியண்ட்!
35
தொடர்ந்து பல மணி நேரம் Earphone போடாதீங்க!
Image Credit : pinterest

தொடர்ந்து பல மணி நேரம் Earphone போடாதீங்க!

Volume குறைவாக இருந்தாலும், Earphone-ஐ தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவது நல்ல பழக்கம் கிடையாது. காதுகள் தொடர்ந்து ஒலியை கேட்டுக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. WHO-வின் Safe Listening வழிகாட்டுதலின்படி, Earphone பயன்படுத்தும் நேரத்தையும், Volume-ஐயும் கட்டுப்படுத்துவது முக்கியம்.

45
Noise-cancelling Earphone பயன்படுத்தலாம்
Image Credit : pinterest

Noise-cancelling Earphone பயன்படுத்தலாம்

பஸ், ரயில், சாலை அல்லது கூட்டமான இடங்களில் இருக்கும்போது தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக பலரும் தெரியாமலேயே Volume-ஐ அதிகரிக்கிறார்கள். இதற்கு பதிலாக வெளிப்புற சத்தத்தை குறைக்கக்கூடிய Noise-cancelling அல்லது நன்றாக பொருந்தக்கூடிய Headphone/Earphone பயன்படுத்தலாம். இதனால் அதிக Volume வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

55
காதில் அறிகுறிகள் வந்தால் அலட்சியம் வேண்டாம்
Image Credit : pinterest

காதில் அறிகுறிகள் வந்தால் அலட்சியம் வேண்டாம்

Earphone பயன்படுத்திய பிறகு காதுக்குள் “ஈ...ஈ...” என்று தொடர்ந்து ரீங்கார சத்தம் கேட்பது, காதுகள் அடைத்தது போல உணர்வது அல்லது மற்றவர்கள் பேசுவதை தெளிவாக கேட்க முடியாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குறிப்பாக, இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் Earphone பயன்பாட்டை குறைத்து, காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுகுவது நல்லது.

Earphone-ஐ மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தாதீங்க!

காதுகளின் சுகாதாரத்திற்காக Earphone-ஐ மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக In-ear Earphone-களை பலர் மாறி மாறி பயன்படுத்தும்போது காதில் இருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது.

Earphone பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், குறைந்த Volume வைத்து குறைந்த நேரம் பயன்படுத்துவது நல்லது.

WHO-வின் தகவல்படி, அதிக சத்தத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து Earphone பயன்படுத்தினால், நாளடைவில் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். எனவே தினமும் Earphone பயன்படுத்துபவர்கள், இன்று முதல் Volume-ஐ கொஞ்சம் குறைத்து, பயன்படுத்தும் நேரத்தையும் கட்டுப்படுத்துவது காதுகளின் ஆரோக்கியத்திற்கு நல்ல பழக்கமாக இருக்கும்.

About the Author

V
Vishnupriya
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சோர்வா இருக்கா? விட்டமின் B12-ஐ எகிற வைக்கும் 5 சூப்பர் உணவுகள்
Recommended image2
Coconut Water: இளநீர் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நல்லதா..?
Recommended image3
After Delivery : பிரசவத்துக்கு பிறகு உடல் எடை, தொப்பை அதிகரிக்கிறதா? மீண்டும் ஃபிட்டாக என்ன செய்யணும்?
Related Stories
Recommended image1
Tech Neck : போன், லேப்டாப் பயன்பாட்டால் கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு ஏற்படும் பாதிப்புகள்!
Recommended image2
Tech உலகில் அடுத்த ட்ரெண்ட்: வேற லெவல் டிசைனில் வெளியாகும் நத்திங் போன் 4a பிங்க் வேரியண்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved