Crying: அழுவதனால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
நம் மனதில் தாங்க முடியாத துக்கம் குடி கொண்டிருக்கும் நேரத்தில், அதனை வெளிப்படுத்துவதற்கோ அல்லது அந்த துக்கத்தை குறைப்பதற்கோ இருக்கும் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால் அது அழுகை மட்டும் தான்.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்பு தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்ட நஷ்டங்கள் உள்ளன. அச்சமயத்தில் நமக்கு ஆறுதலாய் இருப்பது நம் கண்ணீர் தான். நம் மனதில் தாங்க முடியாத துக்கம் குடி கொண்டிருக்கும் நேரத்தில், அதனை வெளிப்படுத்துவதற்கோ அல்லது அந்த துக்கத்தை குறைப்பதற்கோ இருக்கும் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால் அது அழுகை மட்டும் தான்.
அழுகை
அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அழுகை துக்கத்திலும் வரலாம்; சந்தோஷத்திலும் வரலாம்; கோபத்திலும் வரலாம். ஆனால், அழுகை என்பது ஆரோக்கியமான ஒன்று தான் எனக் கூறப்படுகிறது. ஆம், உண்மை தான். அழும் போது மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் குறைந்ததைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படும். கண்ணீர் வெளியில் வருவதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அது பற்றிய தகவல்களை இப்போது காண்போம்.
கண்ணீரின் நன்மைகள்
நாம் அழும் போது கண்ணீர் வெளி வருகையின் காரணத்தால்,
கண்கள் வறண்டு போகாமலும், கண்பார்வை மங்காமலும் இருக்கும்.
கண்களில் உள்ள தூசு மற்றும் துகள்களை நீக்கி கண் எரிச்சலைத் தடுக்க உதவி புரிகிறது.
கண்ணீர் வெளிவருவதன் காரணத்தால் உடலில் எண்டார்ஃபின் மற்றும் அக்சிடோசின் ஆகியவை வெளியாகிறது. இது ஃபீல் குட் கெமிக்கல் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல், ஒரு குழந்தை பிறக்கும் போது தாங்களாகவே சுவாசிக்கத் தொடங்குவதற்கு அழுகை தான் உதவி செய்கிறது. இது மட்டுமின்றி, ஒரு குழந்தையின் முதல் அழுகை, நுரையீரலை வெளி உலக வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள உதவி செய்கிறது.
கண்ணீரைச் சுரக்கின்ற லொக்ரிமல் சுரப்பியில், நரம்பு வளர்ச்சிக்கான புரதம் ஒன்று உள்ளது. இது நியூரான்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. இதன் காரணமாக ஏற்படும் நியூரல் பிளாஸ்டிசிட்டி, அழும் போது மன நிலையை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது.
Neck Darkness: கழுத்தில் இருக்கும் கருமையை நீக்க இதைச் செய்தால் போதும்!
அழுகையானது, நரம்பு மண்டலத்தில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்துகிறது. இந்த விளைவு உடல் மற்றும் மனதை ஓய்வெடுக்கச் செய்கிறது.
அழும் போது மனதில் இருக்கும் பாரங்கள் குறைந்து, மனம் லேசாகி விடும்.
கண்ணீரினால் நம் உடலுக்கு நாம் அறியாத பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆகவே, அழுகையை பலவீனமான ஒன்றாகவோ அல்லது பாலினம் சார்ந்த ஒன்றாகவோ கருதாமல் இயல்பான மனித உணர்வாக கருத வேண்டும். அழுகையினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பலருக்கும் புரிய வைக்க வேண்டும்.