தும்மலை அடக்காதீங்க!! நீங்க நினைச்சு பார்க்காத மோசமான விளைவுகள் வரும்..
தும்மல் வந்தால் அதனை அடக்கவே கூடாது. அதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

Sneeze
பொதுவாக ஜலதோஷம் இருக்கும் போது அடிக்கடி தும்மல் வரும். இதுதவிர தூசு போன்றவற்றலால் ஒவ்வாமையில் சிலருக்கு தும்மல் வரலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். தும்மல் நம்முடைய உடலுக்குள் எந்த விதத் தொற்று கிருமிகளும் உட்புகாமல் தடுக்கக்கூடிய தற்காப்பு செயலாகும். ஒருவர் தும்பும் போது அவருடைய உடலுக்குள் செல்ல முயலும் நுண்ணுயிரிகள், அழுக்கு தூசிகள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மோசமான தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கமுடியும்.
Holding back a sneeze
தும்மல் நல்ல விஷயமாக இருந்தாலும் அது தும்முபவருக்கும், அவர்களை சுற்றியிருப்பவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதற்காக தும்மல் போடாமல் இருக்கக் கூடாது. அதை தடுப்பது உடலில் நோய்களை ஏற்படுத்தக் கூடும். தும்மலால் உடலில் வருகிற அழுத்தம் காது, மூளை, கழுத்து ஆகிய உறுப்புகளில் பாதிப்பை திருப்பிவிடலாம். இந்தப் பதிவில் தும்மலை நிறுத்த முயன்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை காணலாம்.
கண்கள்
தும்மலை நிறுத்த முயற்சி செய்வதால் காற்றின் அழுத்தம் உள்ளேயே அடைபடுகிறது. இப்படி அதிகரிக்கும் காற்று அழுத்தத்தினால் கண்களில் உள்ள இரத்த தந்துகிகள் பாதிப்படைகின்றன. இதனால் கண்களும் பாதிக்கப்படலாம்.
காதுகள்
தும்மலை தடுத்தால் அப்போது எழுகிற காற்று அழுத்தம் காதுகள் உள்ளிட்ட மற்ற உறுப்புகளுக்கு திசை திருப்பப்படும். காதுகளில் என்றால் செவிப்பறைகளில் வெடிப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் காது கேட்காமலும் போகக்கூடும்.
வாதம் வரலாம்!
சிலருக்கு கழுத்து காயங்கள், இடைத்தடுப்பில் பாதிப்பு வரக்கூடும். சில நேரங்களில் மூளை நரம்புகளில் முறிவு ஏற்பட்டு வாதம் வரலாம்.
பொது இடங்கள் தும்மல் போடுவதற்கு கூட்சமாக இருந்தாலும் மூக்கில் கைக்குட்டையை வைத்தபடி தும்மலாம். அதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. மூக்கு, வாய் ஆகியவற்றை மூடிக்கொண்டும் தும்மலாம். இதை செய்வது தும்மலை தடுப்பதை விட நல்ல விஷயம்.
