சர்க்கரை வியாதி பயமா? இந்த 5 வழிகள் மட்டும் போதும்.. நோய் உங்க கிட்டவே நெருங்காது!
சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகளை இங்கு காணலாம்.
நீரிழிவு நோயைத் தடுக்க மிகவும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். உடல் ரீதியாக அதிக சுறுசுறுப்பாக இருப்பதும் அவசியம். உங்களுக்கு நிரீழிவு நோய் இருந்தால் வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வது, நரம்பு, சிறுநீரகம், இதய பாதிப்பு ஆகிய பாதிப்புகளில் இருந்தும் உங்களை காக்கும். அமெரிக்காவை சேர்ந்த நீரிழிவு சங்கத்தின் சமீபத்திய சர்க்கரை நோய் தடுப்பு உதவிக்குறிப்புகளை இங்கு காணலாம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி உங்கள் எடையை இழக்க மட்டுமல்ல, இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சிகள் இன்சுலினுக்கான உணர்திறனை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை சாதாரண வரம்பிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நார்ச்சத்து
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம். நார்ச்சத்து உணவுகள் இதய நோய்க்கான உங்கள் ஆபத்தை குறைக்கும். நார்ச்சத்து உணவுகளில் பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழு தானியங்கள், நட்ஸ் ஆகியவை அடங்கும்.
தானியங்கள்
தானியங்கள் உங்கள் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் பாதியாவது தானியங்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். தானியங்களில் ஸ்நாக்ஸ், பொங்கல், உப்புமா உள்ளிட்ட பல உணவுகளை தயாரிக்கலாம்.
இதையும் படிங்க: உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது?
எடை குறைப்பு
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைப்பதில் மிகவும் கவனிக்க வேண்டியது, உடல் எடைதான். சர்க்கரை வியாதி உடையவர்கள் அதிக எடையோடு இருக்கக் கூடாது. ஒரு ஆய்வில் தொடர் உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தவர்கள் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை கிட்டத்தட்ட 60 சதவிகிதம் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள்
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைப்பது எடையை குறைக்க உதவலாம். ஆனால் நீரிழிவு நோயைத் தடுப்பதில் அவற்றின் செயல்திறன் அறியப்படவில்லை. அவற்றின் நீண்டகால விளைவுகளும் தெரியவில்லை. அதனால் நிபுணரை அணுகி உங்கள் ஆரோக்கியமான உணவுத் திட்டம் குறித்து அறிந்து அதன்படி உண்ணுங்கள்.
இதையும் படிங்க: 'என்னை கட்டாயப்படுத்தாதீங்க' ஆத்திரத்தில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய பெண்ணின் வெறிச்செயலுக்கு என்ன காரணம்?