MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால் எடை தானாக குறையும்!! 

வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால் எடை தானாக குறையும்!! 

Climbing Or Walking : நடைபயிற்சியை விட அதிக கலோரிகளை எரித்து எடையை குறைக்க உதவும் பயிற்சியை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 26 2025, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால் எடை தானாக குறையும்!!

வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால் எடை தானாக குறையும்!!

எடையை குறைக்க மட்டுமின்றி பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த பயிற்சி நடைபயிற்சி. அதைப் போலவே படிக்கட்டுகளில் ஏறுதலும் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளன. இந்தப் பதிவில் படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது நடைபயிற்சி எதில் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறையும் என்பதை காணலாம். 

26
படிக்கட்டு ஏறுதல் vs நடைபயிற்சி

படிக்கட்டு ஏறுதல் vs நடைபயிற்சி

வெறும் உடற்பயிற்சிகளில் எடையை குறைக்க முடியாது. நீங்கள் சரியான உணவு பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் வெள்ளை சர்க்கரை பண்டங்களை, காபி அல்லது டீ குடிப்பதை விட்டுவிட்டால் உடலில் பெரிய மாற்றங்கள் தெரியும். கூடவே நடைபயிற்சி செய்தால் அதிக உடல் எடையை குறைக்கலாம். ஆனால் நடைபயிற்சியை விடவும் படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இரண்டின் நன்மைகளை தெரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள். 

36
படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி;

படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி;

நடைபயிற்சியை விட விரைவில் கலோரிகளை எரிக்க படிக்கட்டுகளில் ஏறுவது உதவும். நாம் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலானது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும். இதனால் நடப்பதை காட்டிலும் அதிக ஆற்றலை செலவிடுவோம்.  ஆற்றல் அதிகம் பயன்படுத்தப்படும்போது வளர்சிதை மாற்றம் அதிகரித்து கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் எடை குறைகிறது.  

46
உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

 ஒரு நாளில் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் படியேறினால் கூட அது 45 நிமிட சுறுசுறுப்பாக நடந்ததற்கு இணையான பலன்களை தரும். 

இதையும் படிங்க:  வெறும் '1000' காலடிகள்- PCOD- யை சீராக்குமா? இந்த விஷயத்தை கவனிங்க

56
படிக்கட்டு ஏறும் பயிற்சி ஏன் சிறந்தது?

படிக்கட்டு ஏறும் பயிற்சி ஏன் சிறந்தது?

வாக்கிங் போகும்போது உடல் உடல் கிடைமட்ட இயக்கத்தை கொண்டிருக்கும். மிதமான ஆற்றலுடன் நடந்தால் போதுமானது. நீங்கள் எடையை குறைக்க வேண்டுமென்றால் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவும் 30 நிமிடங்களுக்கு விறுவிறுப்பாக நடந்தால் தான் குறிப்பிட்ட பலன்களை அடையலாம். ஆனால் படியேறும் போது குறைந்த நிமிடங்களில் அதிக ஆற்றல் பயன்படுத்தப்பட்டு அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.  

இதையும் படிங்க:   வெயிட் லாஸ் முதல் இதய ஆரோக்கியம் வரை; படிக்கட்டு ஏறுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

66
படிக்கட்டு ஏறும் பயிற்சி ஏன் சிறந்தது?

படிக்கட்டு ஏறும் பயிற்சி ஏன் சிறந்தது?

- நீங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி பயிற்சி செய்தால் வெறும் கால்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சியாக இருக்கும். 

- உங்களுடைய மூட்டுகள், கீழ் உடல் தசைகள் உறுதியாக இந்த பயிற்சி சிறந்த தேர்வு. 

- அலுவலகங்களில் அடிக்கடி லிஃப்ட்களிக் செல்லாமல் படிக்கட்டுகளிக் ஏறி இறங்கலாம். இது உடலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். 

- வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பயிற்சி செய்தால் அது நல்ல கார்டியோ போல செயல்பட்டு, இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.

- நடைபயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு 2 நாட்களாவது படிக்கட்டுகளில் பயிற்சி செய்யலாம். எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
எடை இழப்புக்கான நடைப்பயிற்சி
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved