MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Banana: நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை என்ன?

Banana: நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை என்ன?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடலாமா அல்லது வேண்டாமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வை இப்பதிவில் காண்போம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Jan 06 2023, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பழங்கள் என்றாலே அனைவரும் வயது வித்தியாசமின்றி விரும்பி உண்பார்கள். அதிலும் மிக எளிதாக கிடைக்க கூடிய வாழைப்பழத்தை யாரும் ஒதுக்க மாட்டார்கள். ஏனெனில் அதன் சுவை அனைவரையும் இழுத்து விடும். முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. பழம் மட்டுமின்றி, இதன் தோலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடலாமா அல்லது வேண்டாமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வை இப்பதிவில் காண்போம்.
 

26

வாழைப்பழம்

வாழைப்பழம் அதிக சுவை நிறைந்த, சத்தான மற்றும் விலை குறைவாக கிடைக்கும் ஒரு அற்புதமான பழமாகும். இதில் நார்சத்து அதிகமாக நிம்பியுள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. வாழைப்பழங்கள் இனிப்பான சுவையைக் கொண்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவர் வேண்டுமானாலும் உண்ணலாம்.

36

பாதிப்புகள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என பலரால் சொல்லப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால், அவை மற்ற உணவுகளை காட்டிலும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. ஒரு வாழைப்பழத்தில் ஏறக்குறைய 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை இருக்கிறது. அதே நேரத்தில் இதில் நார்ச்சத்தும் அதிகமாக நிறைந்துள்ளது.

46

சர்க்கரையின் அளவு

நார்ச்சத்துக்கள் பொதுவாக சர்க்கரையை மழுங்கடிக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடுவது நல்லது தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழைப்பழத்தின் பழுத்த நிலையின் அடிப்படையில் இதன் பாதிப்பு உள்ளது. நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தில் அதிக சர்க்கரை இருக்கும்.  அதேநேரம் பச்சை நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில், சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கும் ஆகவே, இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது.

56

வாழைப்பழங்களில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சை வாழைப்பழத்தில் காணப்படும் ஸ்டார்ச் ஆனது, கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது என ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

66

வாழைப்பழத்தின் நன்மைகள்

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையின் அளவை நிர்வகிக்க உதவி புரிகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுதவிர வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயம் குறைகிறது என்பது தெரிய வந்துள்ளது.  
 

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜிம், டயட் செய்தும் எடை குறையலையா? இந்த 5 தவறுகள் காரணமாக இருக்கலாம்
Recommended image2
இதய நோயாளிகளே... வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்!
Recommended image3
Now Playing
Healthy Ragi Hide & Seek Cookies | No Maida | No Baking Powder | No Soda
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved