MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • ரத்தசோகை மட்டுமல்ல.. எக்கச்சக்க நோயை தடுக்கும் '1' கிளாஸ் பீட்ரூட் ஜூஸ்..

ரத்தசோகை மட்டுமல்ல.. எக்கச்சக்க நோயை தடுக்கும் '1' கிளாஸ் பீட்ரூட் ஜூஸ்..

Beetroot Juice Health Benefits : இந்த பதிவில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 06 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரத்தசோகை மட்டுமல்ல.. எக்கச்சக்க நோயை தடுக்கும் '1' கிளாஸ் பீட்ரூட் ஜூஸ்..

ரத்தசோகை மட்டுமல்ல.. எக்கச்சக்க நோயை தடுக்கும் '1' கிளாஸ் பீட்ரூட் ஜூஸ்..

பீட்ரூட் ஒரு வேர் காய்கறியாகும். பீட்ரூட் உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் தான் பலர் இதில் ஜூஸ் , அல்வா அல்லது ஸ்மூத்தி செய்து சாப்பிடுகிறார்கள். அதுவும் குறிப்பாக, பெரும்பாலானோர் தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பீட்ரூட் ஜூஸ் இரத்த சோகை பிரச்சினையை தடுப்பது முதல் சருமத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை உள்ளிட்ட பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அந்தவகையில், தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரத்த சோகை பிரச்சனையை தடுக்கும்:

ரத்த சோகை பிரச்சனையை தடுக்கும்:

உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக தான் ஹீமோகுளோபின் குறைய தொடங்கும். இதனால் ரத்த சோகை பிரச்சனை ஏற்படும். பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இது ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும். எனவே ரத்த சோகைப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது.

கொழுப்பை குறைக்கும்:

பீட்ரூட்டில் இருக்கும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றது. உடலில் கெட்ட கொழுப்பு குறைவதன் மூலம் அடைபட்ட தமனிகளின் பிரச்சனை சரியாகும். இதனால் இதய நோய்களின் அபாயமும் குறையும். எனவே, தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தை குறைத்து விடலாம்.

35
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் ஒரு அருமருந்தாகும். ஆய்வுகளின் படி, தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் பீட்ரூட் ஜூஸில் அதிகளவு நைட்ரிக் ஆக்சைடு உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கிய மேம்படும்:

தினமும் காலை ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இதை ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் இந்த ஜூஸில் இருக்கும் நைட்ரேட் இதய நோய்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க:  உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் பீட்ரூட் ஜூஸ்... ஆனா 'இவங்க' குடிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?

45
கல்லீரலுக்கு நல்லது:

கல்லீரலுக்கு நல்லது:

கல்லீரல் நம்முடைய உடலின் ஒரு முக்கியமான உறுப்பு என்பதால் இதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் பீட்ரூட் ஜாஸ் குடிக்கவும். பீட்ரூட் ஜூஸ் கல்லீரலை ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும் இது நச்சு நீக்கத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்க உதவுகிறது. இதனால் தொற்று நோய்கள் வராமல் வருவதை சுலபமாக தடுத்துவிடலாம். எனவே தினமும் காலை ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் தவறாமல் குடியுங்கள்.

இதையும் படிங்க:  இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி பீட்ரூட் வேண்டாம்னு சொல்லமாட்டீங்க!

55
பிற நன்மைகள்:

பிற நன்மைகள்:

- பீட்ரூட்டில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும்.

- பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. கொழுப்பும் இல்லை எனவே இதை தினமும் குடித்து வந்தால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.

- பீட்ரூட் ஜூஸில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

- சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(26.0 ov)114/4
ENGENG
328
AUS need 215 runs in 144 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Innings Break
PAKPAK
325
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Tiffen box Recipe: குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்தி லஞ்ச் ரெசிபி; இந்த 10 டிஷ் ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Thanjavur Orappadai : தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை..மொறுமொறுப்பான சுவையில் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!
Recommended image3
Sweet Corn Idli : ஸ்வீட் கார்ன் இட்லி ..குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் சுவையான காலை உணவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved