MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் பீட்ரூட் ஜூஸ்... ஆனா 'இவங்க' குடிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?

உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் பீட்ரூட் ஜூஸ்... ஆனா 'இவங்க' குடிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?

Beetroot Juice : உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவே கூடாது. அது யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 15 2024, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Beetroot Juice Side Effects In Tamil

Beetroot Juice Side Effects In Tamil

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பலரும் பலவிதமான விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருகின்றனர். ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஆபத்து என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த ஜூஸ் ரொம்பவே நல்லது. மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது.

25
Beetroot Juice Side Effects In Tamil

Beetroot Juice Side Effects In Tamil

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை பீட்ரூட் ஜூஸ் வாரி வழங்கினாலும் ஒரு சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும் தெரியுமா? ஆம், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவே கூடாதாம். அது யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: தினமும் காலையில் ஏன் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்? இதை தெரிஞ்சுக்கிட்டா நீங்களும் ஃபாலோ பண்ணுவீங்க..

35
Beetroot Juice Side Effects In Tamil

Beetroot Juice Side Effects In Tamil

யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்க கூடாது?

அலர்ஜி உள்ளவர்கள்

ஒரு சிலருக்கு பீட்ரூட் அலர்ஜியை ஏற்படுத்தும்  அத்தகையவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அவர்களுக்கு அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் வரும். எனவே பீட்ரூட் அலர்ஜி உள்ளவர்கள் ஒருபோதும் பீட்ரூட் ஜூஸ் மற்றும் பீட்ரூட்டில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். 

குறைந்த ரத்த அழுத்தம்

குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் ஒருபோதும் குடிக்கவே வேண்டாம். மேலும் குறைந்த ரத்த அழுத்தத்திற்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறி குடித்தால் அவர்களுக்கு தலை சுற்றல், மயக்கம் வர வாய்ப்பு உள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

45
Beetroot Juice Side Effects In Tamil

Beetroot Juice Side Effects In Tamil

செரிமான பிரச்சனை

பீட்ரூட் ஜூஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் குடிக்க கூடாது. இதனால் செரிமான பிரச்சனை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி எரிச்சல் கொண்ட குடல் நோய் குறி உள்ளவர்களை இது இன்னும் பாதிக்கும். ஒருவேளை நீங்கள் குடிக்க விரும்பினால் முதலில் கொஞ்சமாக குடித்து பழகுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

சிறுநீரகப் பிரச்சனை

உங்களுக்கு சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் பீட்ரூட் ஜூஸ் ஒருபோதும் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதில் அதிக அளவு ஆக்சலேட்டுகள் இருப்பதால், பீட்ரூட் ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதனால் உங்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும். மேலும் ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

55
Beetroot Juice Side Effects In Tamil

Beetroot Juice Side Effects In Tamil

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பீட்ரூட் ஜூஸ் நீங்கள் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கல்லீரல் பிரச்சனை

உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தால் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு உடல் அரிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பீட்ரூட் ஜூஸ் ரத்த சர்க்கரை அளவை குறைத்து விடும்.

இதையும் படிங்க: இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி பீட்ரூட் வேண்டாம்னு சொல்லமாட்டீங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved