பெட்ஷீட்டுக்கு அடியில் இந்த சோப்பு வைங்க.. அப்புறம் தூக்கத்தை கட்டுப்படுத்தவே முடியாது!
நன்றாக தூங்க வேண்டுமா? உங்களுடைய பெட்ஷீட்டிற்கு கீழே சோப்பு வைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முறையை யார் பின்பற்ற வேண்டும்? என்ற முழுவிவரம் இதோ!
நம்மில் பெரும்பாலானோர் அமைதி இல்லாமல் உணர்கிறோம். இது வெறும் மன நிம்மதி சார்ந்த பிரச்சனையாக இருந்தால் அதுவே சரியாகிவிடும். ஆனால் உடலில் ஓர் அமைதியில்லா நிலை தொடர்ந்து இருந்தால், அது நோய் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் கால் நடுக்கத்தை நாம் சாதாரணமாக விடமுடியாது. எப்போதும் கால்கள் ஓய்வின்றி இருப்பது Restless legs syndrome என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் அல்லது RLS என்பது ஒரு தூக்கக் கோளாறு ஆகும். சிலர் தூங்கும்போது காலாட்டி கொண்டே இருப்பார்களே அதுதான். கால்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாடற்ற தூண்டுதல் இந்த நோய் பாதிப்பால் ஏற்படுகிறது. பொதுவாக மாலை மற்றும் இரவில் மோசமாக இருக்கும். தூங்கி கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கும்போது இந்த பிரச்சனை தலைதூக்கும். தூங்காமல் சாதாரணமாக நடமாடும்போது இந்த பிரச்சனை இருப்பதில்லை.
அறிகுறிகள்
கால்களில் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அவற்றை நகர்த்துவதற்கான (ஆட்டிக்கொண்டே) தவிர்க்கமுடியாத தூண்டுதலால் ஓய்வெடுக்க முடியாது. இதனால் அதிக சோர்வு இருக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் சினிமாவிற்கு செல்லவோ, தூர பயணங்களுக்காக ரயில், விமானம் ஆகியவற்றில் பயணிக்கவும் மிகவும் தயங்குவார்கள். ஒரே இடத்தில் கால்களை அசைக்காமல் இருப்பது இவர்களுக்கு மிகவும் சிரமத்தை கொடுக்கும்.
நோய் காரணம்
நம்முடைய இயக்கம் மற்றும் அனிச்சை செயல்களை கட்டுப்படுத்தும் மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படையும்போது இந்த ஆர்.எல்.எஸ் பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு பரம்பரையாக வரலாம். இரும்பு சத்து குறைவாக இருப்பது, சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
இதற்கும் சோப்புக்கும் என்ன தொடர்பு?
கால் நடுக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவில் தூங்குவது சிரமமாக இருக்கும் அதனால் அவர்கள் தூங்கும் படுக்கையில் பெட்ஷீட் கீழே சோப்பு வைத்து தூங்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு நிரூபிக்கப்பட்ட சான்றுகள் ஏதும் இல்லை. லாவண்டர் சோப் உங்களுடைய அமைதியின்மை பிரச்சனைக்கு உதவலாம். ஒவ்வொரு மாலையிலும் உங்களுடைய பெட்ஷீட்டுக்கு கீழே அதாவது கால் வைக்கும் இடத்தில் லாவண்டர் சோப்பு வைப்பதால், நடுங்கும் கால்கள் அமைதியாவதை நீங்கள் உணர முடியும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலரும் இந்த முறையை பின்பற்றி உள்ளதாக ஆன்லைனில் பகிர்ந்துள்ளனர்.