- Home
- உடல்நலம்
- உணவு
- Pomegranate Chutney : இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னிக்கு பதிலா மாதுளை சட்னி ட்ரை பண்ணுங்க!
Pomegranate Chutney : இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னிக்கு பதிலா மாதுளை சட்னி ட்ரை பண்ணுங்க!
Pomegranate Chutney Recipe : தேங்காய் சட்னிக்கு பதிலா இரும்புச்சத்து நிறைஞ்ச மாதுளை சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. மாதுளை சட்னி செய்றது எப்படினு சுலபமான வழியில இங்க தெரிஞ்சுக்கோங்க.

மாதுளை சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா?
நம்ம பெரியவங்க காலத்துல எல்லாம் சமையல்ல புதுசு புதுசா எந்த ரெசிபியும் பெருசா செஞ்சது இல்ல. காலையில உப்புமா, இட்லி, மதியம் சப்பாத்தி, சாதம், ராத்திரிக்கும் அதே சாதம், ரசம்னு தான் சமைச்சாங்க. விசேஷ நாட்கள்ல மட்டும் ஸ்வீட், அதிலும் முக்கியமா போளி, கூடவே சாதம், ரசம்னு ரெடியாகும். மத்தபடி சாதாரண நாட்கள்ல ஸ்பெஷல் சமையல் எதுவும் பெருசா இருக்காது.
ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. வீட்ல இருக்கிறவங்க தினமும் புதுசு புதுசா ரெசிபிகளை தேடிட்டே இருக்காங்க. அதுமட்டுமில்லாம சமையலறையில தினமும் ஒரு புது எக்ஸ்பெரிமெண்ட் நடந்துகிட்டே இருக்கு. நீங்களும் அந்த மாதிரி புது ரெசிபிகளை தேடுறவங்களா இருந்தா, வாங்க புதுசா மாதுளை சட்னி எப்படி செய்றதுனு தெரிஞ்சுக்கலாம்.
மாதுளையில சட்னியா! அப்படின்னு உங்களுக்கு தோணலாம். ஏன்னா மாதுளைய பழமா சாப்பிட்டு தான் பழக்கம். அதுல சட்னி செய்றதுங்கறது புதுசுதான். ஆனா இப்போ நிறைய பேரு மாதுளை சட்னி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.
மாதுளை சட்னி செய்றது ரொம்ப ஈஸி
மாதுளை சட்னி பாக்குறதுக்கே ரொம்ப அட்ராக்ட்டிவா இருக்கும், பார்த்தாலே நாக்குல எச்சில் ஊறும். மாதுளை சட்னி டேஸ்ட் எல்லாருக்கும் பிடிக்கும். சாப்பாட்டோட டேஸ்ட்ட கூட்ட ஊறுகாய், அப்பளம், பொடி, சட்னி இதெல்லாம் யூஸ் பண்ணுவோம்ல? அதே மாதிரி மாதுளை சட்னி சாதம், பருப்பு, சப்பாத்தி, பரோட்டா, வடாபாவ் அல்லது மிளகாய் பஜ்ஜிக்கு சூப்பர் டேஸ்ட் கொடுக்கும்.
சட்னினு வந்துட்டா நம்ம சாதாரணமா தேங்காய் சட்னி தான் செய்வோம். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரினு எல்லாத்துக்கும் தேங்காய் சட்னி தான். ஆனா அதுக்கு பதிலா மாதுளை சட்னி செஞ்சா எப்படி இருக்கும்? மாதுளை சட்னி செய்றது ஒன்னும் கஷ்டம் இல்ல, இங்க ஈஸியா எப்படி செய்றதுனு சொல்லிருக்கோம். இந்த சிம்பிள் மெத்தட பாலோ பண்ணி நீங்க 'மாதுளை சட்னி'யை சூப்பரா ரெடி பண்ணலாம்.
மாதுளை சட்னி செய்றது எப்படி, சிம்பிள் ரெசிபி இதோ
காய்கறி மார்க்கெட்லயோ, பழக்கடையிலயோ மாதுளை சுலபமா கிடைக்கும். உங்களுக்கு கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் இனிப்பு பிடிக்கும்னா இந்த மாதுளை சட்னி உங்களுக்கானதுதான். சாதாரண சாப்பாட்டு கூட இத வச்சு சாப்பிடலாம். இந்த சட்னி செய்ய அதிக நேரமும் ஆகாது. சமையலறையில இருக்குற சில பொருட்களை வச்சே இத ரெடி பண்ணிடலாம். மாதுளை விதைகளை சாப்பிடுறதால உடம்புக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும், ஆரோக்கியமும் மேம்படும்.
தேவையான பொருட்கள்
- மாதுளை
- இஞ்சி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- புதினா இலைகள்
- வெங்காயம்
- தக்காளி
- உப்பு
- தண்ணீர்
மாதுளை சட்னி செய்யும் முறை
சட்னி செய்றதுக்கு முன்னாடி மாதுளை பழத்தை கழுவி சுத்தம் பண்ணி, அதுல இருந்து விதைகளை தனியா எடுத்துக்கோங்க.
ஒரு மிக்ஸி ஜார்ல மாதுளை விதைகள், பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கோங்க. சட்னிக்கு கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கலாம்.
அப்புறம் அதுல கொத்தமல்லி தழை, புதினா, வெங்காயம், தக்காளி, கொஞ்சமா இனிப்பு (வெல்லம் அல்லது சர்க்கரை) சேர்த்து மறுபடியும் அரைச்சுக்கோங்க.
இப்படி ரெடி பண்ண சட்னியை பிரிட்ஜ்ல வெச்சா, 4 ல இருந்து 5 நாள் வரைக்கும் கெட்டுப்போகாம இருக்கும்.
ஈஸியான வழியில சூப்பரான மாதுளை சட்னி சில நிமிஷத்துலயே ரெடி.
சட்னி கொஞ்சம் காரமா வேணும்னா, நீங்க பச்சை மிளகாய அதிகமா சேர்த்துக்கலாம். இதனால டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்.













