MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Kongunadu Mushroom Biryani : கொங்குநாடு ஸ்டைல் சீரக சம்பா காளான் பிரியாணி! இப்படி செய்து பாருங்க..சுவை அள்ளும்!

Kongunadu Mushroom Biryani : கொங்குநாடு ஸ்டைல் சீரக சம்பா காளான் பிரியாணி! இப்படி செய்து பாருங்க..சுவை அள்ளும்!

Kongu Nadu Mushroom Biryani: சீரக சம்பா அரிசியில் மணமணக்கும் கொங்குநாடு ஸ்டைல் காளான் பிரியாணி செய்வது எப்படி? தேவையான பொருட்கள், அரைக்கும் மசாலா, செய்முறை மற்றும் சுவையான பிரியாணி தயாரிக்கும் குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Oct 12 2026, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
கொங்குநாடு சீரக சம்பா காளான் பிரியாணி
Image Credit : Gemini Ai

கொங்குநாடு சீரக சம்பா காளான் பிரியாணி

வீட்டிலேயே ஹோட்டல் சுவையில், மணக்க மணக்க ஒரு பிரியாணி செய்து சாப்பிட ஆசையா? வழக்கமாக சிக்கன், மட்டன் பிரியாணி செய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான சுவையில் காளான் பிரியாணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

அதிலும், கொங்குநாடு சமையல் பாணியில் சீரக சம்பா அரிசி, நறுமண மசாலாக்கள், சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி என ஒவ்வொன்றும் சேரும்போது அதன் வாசனையே சாப்பிடத் தூண்டும்.

காளானின் மென்மையான தன்மையும், சீரக சம்பா அரிசியின் தனித்துவமான மணமும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலாக்களின் சுவையும் இணைந்து இந்தப் பிரியாணியை அசத்தலாக மாற்றும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாகச் செய்யக்கூடிய இந்தக் கொங்குநாடு ஸ்டைல் காளான் பிரியாணியை, மதிய உணவாகவோ அல்லது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்காகவோ செய்து அசத்தலாம்.

அப்படி சுவையான இந்த காளான் பிரியாணியைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? அதன் செய்முறை என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
தேவையான பொருட்கள்
Image Credit : Pinterest

தேவையான பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி - 2 கப்
  • காளான் - 200 முதல் 250 கிராம்
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • புதினா இலைகள் - 1\2 கப்
  • கொத்தமல்லி இலைகள் - 1\2 கப்
  • முந்திரி - 6
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - சுமார் 3 கப் (அரிசியின் தன்மைக்கேற்ப மாற்றவும்)


அரைக்கத் தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் - 10 முதல் 12
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1 அங்குலத் துண்டு
  • பூண்டு - 8 பல்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • பட்டை - 1 சிறிய துண்டு
  • ஏலக்காய் - 3
  • கிராம்பு - 4
  • அன்னாசிப்பூ - 1
  • ஜாதிப்பத்திரி - சிறிய துண்டு
  • மராட்டி மொக்கு - 1
  • கல்பாசி - சிறிய துண்டு


தாளிக்கத் தேவையான பொருட்கள்

  • பட்டை - 1 சிறிய துண்டு
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • முந்திரி
  • புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
39
செய்முறை - படி 1
Image Credit : Gemini Ai

செய்முறை - படி 1

அரிசியை ஊறவைக்கவும்

சீரக சம்பா அரிசியை 2 -3 முறை நன்றாகக் கழுவி, சுமார் 20 - 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு தனியாக வைக்கவும்.

49
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

மசாலாவை அரைக்கவும்

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, ஜாதிப்பத்திரி, மராட்டி மொக்கு, கல்பாசி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

59
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

காளானைத் தயார் செய்யவும்

காளானைச் சுத்தம் செய்து, தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். அதிக நேரம் தண்ணீரில் ஊறவைக்காமல் கழுவி வடித்துக்கொள்வது நல்லது.

69
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

வெங்காயம், தக்காளியை வதக்கவும்

அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் முந்திரியைச் சேர்த்து லேசாக வறுக்கவும்.

பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பிறகு தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.

79
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

அரைத்த மசாலா, காளான் சேர்க்கவும்

இப்போது அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் காளான், புதினா, கொத்தமல்லி இலைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 3 - 5 நிமிடங்கள் வதக்கவும். காளானிலிருந்து தண்ணீர் வெளிவரும் என்பதால், மசாலா அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டிருக்கவும்.

89
படி 6
Image Credit : Gemini Ai

படி 6

அரிசி, தண்ணீர் சேர்க்கவும்

ஊறவைத்து வடித்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். எலுமிச்சைச் சாற்றையும் சேர்க்கவும். பின்னர் சுமார் 3 கப் சூடான தண்ணீரை ஊற்றி, உப்பைச் சரிபார்க்கவும்.

அரிசியின் தரம், ஊறவைத்த நேரம், காளானிலிருந்து வெளிவரும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்துத் தண்ணீரின் அளவைச் சிறிது மாற்றிக்கொள்ளலாம்.

99
படி 7
Image Credit : Gemini Ai

படி 7

பிரியாணியை வேகவைக்கவும்

குக்கரில்: தண்ணீர் கொதித்ததும் மூடியைப் போட்டு, மிதமான தீயில் சுமார் 1 விசில் வரும்வரை வேகவைக்கவும். பின்னர் குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்துவிட்டு அடுப்பை அணைக்கவும். அழுத்தம் தானாக இறங்கிய பிறகு திறக்கவும்.

பாத்திரத்தில்: மூடி போட்டு, குறைந்த தீயில் அரிசி நன்றாக வேகும்வரை சுமார் 15 - 20 நிமிடங்கள் சமைக்கவும். தேவைக்கேற்ப நேரத்தை மாற்றவும்.

இறுதியில் சாதத்தை உடையாமல் மெதுவாகக் கிளறினால், மணமணக்கும் கொங்குநாடு ஸ்டைல் காளான் பிரியாணி தயார்.

காளான் பிரியாணியின் சுவையை அதிகரிக்க சில குறிப்புகள்

சீரக சம்பா அரிசி: பிரியாணிக்கு இந்த அரிசி தனித்துவமான மணத்தையும் சுவையையும் தரும்.

சின்ன வெங்காயம்: அரைத்த மசாலாவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது சுவையை மேம்படுத்தும்.

கல்பாசி, மராட்டி மொக்கு: இவை கொங்குநாடு பாணி மசாலாவின் நறுமணத்துக்கு உதவும். அளவுக்கு அதிகமாகச் சேர்க்க வேண்டாம்.

காளானை அதிக நேரம் வேகவைக்க வேண்டாம்: அதிகமாக வேகினால் காளான் மென்மையாகி அதன் வடிவம் மாறலாம்.

தண்ணீரின் அளவு: அரிசி ஊறியிருப்பதையும் காளானிலிருந்து தண்ணீர் வெளிவருவதையும் கணக்கில் கொண்டு அளவிடவும்.

எதனுடன் பரிமாறலாம்?

இந்தக் காளான் பிரியாணியுடன் வெங்காய ரைத்தா, கத்தரிக்காய் தொக்கு , கத்திரிக்காய் குழம்பு போன்றவற்றைப் பரிமாறலாம். அப்பளம் அல்லது வெள்ளரிக்காய் ரைத்தாவும் நல்ல சேர்க்கையாக இருக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chettinad Special Tiffen: செட்டிநாடு ஸ்பெஷல் டிபன்... பஞ்சு போன்ற வெள்ளைப் பணியாரமும், காரசாரமான வரமிளகாய் சட்னியும்!
Recommended image2
Ginger Chutney: ஆல் இன் ஒன் இஞ்சி துவையல்; நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்!
Recommended image3
idli batter vada recipe: மீதமான இட்லி மாவு இருக்கா? அப்போ 5 நிமிடத்தில் மொறு மொறு வடை ரெடி!
Related Stories
Recommended image1
Green Gram Beetroot Adai: ஹெல்த்தியான பச்சை பயறு பீட்ரூட் அடை.. இப்படி செஞ்சு பாருங்க, மொறுமொறுனு சூப்பரா இருக்கும்!
Recommended image2
Amla Pickle Recipe: பூண்டு, புளி சேர்த்து நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்..சுவை அள்ளும் எளிய ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved