MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • ஹெல்த் டிப்ஸ்: கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பூண்டு சாப்பிடுவது நல்லதா?...கெட்டதா?..

ஹெல்த் டிப்ஸ்: கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பூண்டு சாப்பிடுவது நல்லதா?...கெட்டதா?..

உடலில் அளவு அதிகமாக கொலஸ்ட்ரால் இருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த பூண்டு சாப்பிடுவது நல்லது. இருப்பினும் பூண்டை அளவோடு எடுத்துக் கொள்வது அவசியம். அதிக அளவு கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டிலுள்ள நன்மைகள் குறித்து காணலாம்...

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 24 2023, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பூண்டு சில தனித்துவமான தன்மைகளைக் கொண்டது. அது சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும். பூண்டில் இயற்கையாக பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. 

இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. குறிப்பாக இதயம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்க பூண்டைப் பயன்படுத்தினால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பூண்டு பற்றி ஆய்வுகள் கூறும் கருத்து:

பூண்டு பற்றி ஆய்வுகள் கூறும் கருத்து:

பூண்டை மிதமாக உட்கொள்வது  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டு சமையலை சுவையாக்குவது மட்டுமின்றி இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. பப்மெட் மத்திய ஆராய்ச்சியின் படி, ஒரு பல் பூண்டு இதய நோய்க்கும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த நாளங்களை சுத்தம் செய்ய வேலை செய்கிறது. 

இதில் உள்ள அல்லின், அல்லிசின், அஸ், அல்லைல் ப்ராபில் டைசல்பைட், டயல் ட்ரைசல்பைட், எஸ்-அலைல் மெர்காப்டோ சிஸ்டைன் போன்ற 33 சல்பர் சேர்மங்கள் மற்றும் பல என்சைம்கள் உள்ளன. அவை அனைத்தும் நம் உடலில் வெவ்வேறு வழிகளில் வேலை செய்கின்றன. மேலும், பூண்டில் உள்ள 17 அமினோ அமிலங்கள் உடலுக்கு பல்வேறு வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பூண்டில் உள்ள செலினியம், ஜெர்மானியம் மற்றும் டெல்லூரியம் ஆகிய தாதுக்கள் திசுக்கள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

35

இந்த சேர்மங்கள் டிஎன்ஏவை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், பூண்டு நமது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் உதவுகிறது. குறிப்பாகஉடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதையும் படிங்க: கொளுத்தும் வெயிலில் உடலில் பிரச்சினையா?..அப்போ இந்த பழத்தை சாப்பிடுங்க...உடனே தீர்வு கிடைக்கும்..?

45
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

 பூண்டில் உள்ள கந்தகம் அதிக கொலஸ்ட்ரால் அளவுடன் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் அரை முதல் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு 10% குறைகிறது. மேலும், 20 கிராம் பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து எடுத்துக் கொண்டால், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது. இது நரம்புகளை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி கெட்ட  கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது. 

55
பக்க விளைவுகள்:

பக்க விளைவுகள்:

பூண்டு சாப்பிடுவதால் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
வீக்கம் மற்றும் இரைப்பை பிரச்சினைகள் போன்றவை இதில் அடங்கும். எனவே குறைந்தது 2 பூண்டு மொட்டுக்கள் எடுத்துக் கொள்ள் வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவை குறிக்க தினமும் பூண்டு சாப்பிட விரும்புவோர் பூண்டு சாப்பிடுவதற்கு உணவு மருத்துவரை அணுகுவது நல்லது

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Appalam Mor Kuzhambu : அப்பளம் மோர் குழம்பு..தேங்காய் மசாலாவில் அசத்தலான சுவை; ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
Recommended image2
Vazhaipoo Usili : வாழைப்பூ உசிலி..சத்தும் சுவையும் நிறைந்த பாரம்பரிய உணவு!
Recommended image3
Poondu Thakkali Kara Urundai : கை நிறைய பூண்டு, தக்காளி இருந்தால் போதும்! சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமான கார உருண்டை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved