MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Empty Stomach: வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிடுறீங்களா? என்ன ஆகும் தெரியுமா?

Empty Stomach: வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிடுறீங்களா? என்ன ஆகும் தெரியுமா?

Food avoid on Empty Stomach: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை? அவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்? என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 01 2026, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெறும் வயிற்றில் டீ சாப்பிடலாமா?
Image Credit : pinterest

வெறும் வயிற்றில் டீ சாப்பிடலாமா?

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதே கஷ்டம்னா, எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் இருப்பது அதைவிட கஷ்டம். ஆனால், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ, காபி குடித்தால் சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்று அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

குறிப்பாக, காபியில் உள்ள காஃபின் (Caffeine) வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து, குடல் பகுதியில் எரிச்சலை உண்டாக்கும். ஏற்கனவே அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகள்
Image Credit : pinterest

அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகள்

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற citrus பழங்கள் உடலுக்கு நல்லதுதான். ஆனால், இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சலை உருவாக்கும்.

35
பொறித்த உணவுகள்
Image Credit : pinterest

பொறித்த உணவுகள்

பஜ்ஜி, போண்டா, வடை போன்ற அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்தை சிரமமாக்கி, வயிறு உப்பசமாக இருப்பது போன்று தோன்றும்.

fatty அல்லது greasy foods சிலருக்கு dyspepsia அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

45
தயிர் சாப்பிடக்கூடாதா?
Image Credit : pinterest

தயிர் சாப்பிடக்கூடாதா?

அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தயிர் அல்லது Yoghurt அசௌகரியத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் மதிய உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது சிறந்தது.

55
வாழைப்பழம்
Image Credit : pinterest

வாழைப்பழம்

ஆரோக்கியமானவர்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.

அதிகமாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடும்போது ரத்தச் சர்க்கரை வேகமாக உயரலாம். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தின் அளவு மற்றும் பழுத்த நிலையை கவனிப்பது நல்லது. 1992-ல் Diabetic Medicine இதழில் வெளியான ஆய்வில், வாழைப்பழம் பழுக்கும்போது அதிலுள்ள மாவுச்சத்து சர்க்கரையாக மாறுவதால் இந்த வேறுபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: எல்லோருக்கும் வெறும் வயிற்றில் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவது ஆபத்தானது என்று பொதுவாகக் கூற முடியாது. ஒருவருக்கு பிரச்சினை ஏற்படுத்தும் உணவு மற்றொருவருக்கு எந்தத் தொந்தரவும் தராமல் இருக்கலாம். ஒருவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாத உணவு, மற்றொருவருக்கு நெஞ்செரிச்சல், ஏப்பம் அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

குறிப்பாக அசிடிட்டி அல்லது Gastroesophageal reflux disease (GERD) போன்ற இரைப்பை பிரச்சினை உள்ளவர்கள் தனிப்பட்ட உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetarian Fried Chicken : சிக்கனே இல்லாமல் சிக்கன் மாதிரி சுவை! இந்த ஒரு பொருளில் செய்தால் செம கிரிஸ்பி!
Recommended image2
Andhra Spicy Chicken: சண்டே ஸ்பெஷல் ! ஆந்திரா ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?
Recommended image3
இயற்கையின் அமிர்தம்: கற்றாழையின் வியக்கத்தக்க மருத்துவ அதிசயங்கள்!
Related Stories
Recommended image1
Turmeric Water: வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர்.! இவ்வளவு நன்மைகளா?
Recommended image2
வெறும் வயிற்றில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved