- Home
- உடல்நலம்
- உணவு
- Mutton Chops: மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்.. குக்கரில் ஈஸியா செய்வது எப்படி?
Mutton Chops: மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்.. குக்கரில் ஈஸியா செய்வது எப்படி?
Sunday special Mutton Recipe : எப்பவும் ஒரே மாதிரி மட்டன் குழம்பு சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ மிலிட்டரி ஹோட்டல் சுவையில் கமகமக்கும் மட்டன் சாப்ஸ் ட்ரை பண்ணுங்க. குக்கரில் ரொம்ப ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Sunday special Mutton recipe
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அசைவ பிரியர்கள் வீட்ல மட்டன் குழம்பு அல்லது கிரேவி கண்டிப்பா இருக்கும். ஆனா, ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி செஞ்சு போர் அடிச்சிருந்தா, மிலிட்டரி ஹோட்டல் சுவையில் 'மட்டன் சாப்ஸ்' செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன். குக்கரை வெச்சு ரொம்ப ஈஸியா இதை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
Mutton Cooking Tips: மட்டன் எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் கல்லு மாதிரி இருக்கா? இதை மறந்துடாதீங்க!
தேவையான பொருட்கள்
மட்டன்: 1 கிலோ (சுத்தமாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்)
மட்டன் வேகவைக்க:
எண்ணெய்: 2 ஸ்பூன்
வெங்காயம்: 1 (சிறியது)
மஞ்சள் தூள்: சிறிதளவு
உப்பு: தேவைக்கேற்ப
மசாலா வதக்க:
எண்ணெய்: 2 ஸ்பூன்
வெங்காயம்: 4 (நடுத்தர அளவு)
பூண்டு: 3 முழு பூண்டு
இஞ்சி: 3 இன்ச்
பச்சை மிளகாய்: 8 முதல் 9 வரை
மிளகு: 1 ஸ்பூன்
கசகசா: 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை: 1 ஸ்பூன் (கிரேவி திக்காக வர)
பட்டை: சிறிதளவு
கிராம்பு: சிறிதளவு
ஏலக்காய்: 1
துருவிய தேங்காய்: அரை கப்
கொத்தமல்லி இலை: 1 கைப்பிடி
புதினா இலை: 1 கைப்பிடி
செய்முறை
முதல்ல மட்டனை 70% மட்டும் வேகவெச்சுக்கணும் (முழுசா வேகக்கூடாது). அடுப்புல குக்கரை வெச்சு ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி சூடாக்குங்க. எண்ணெய் காய்ஞ்சதும் பொடியா நறுக்கின வெங்காயம், கொஞ்சமா மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்க. அடுத்து, சுத்தமா கழுவி தண்ணி இல்லாம பிழிஞ்சு வெச்சிருக்கற மட்டனை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு 3-4 நிமிஷம் நல்லா வதக்குங்க. மட்டன் தண்ணி விட்டதும், அது வேகுற அளவுக்கு கொஞ்சமா தண்ணி ஊத்தி, குக்கரை மூடி 3 விசில் விடுங்க. மட்டன் முழுசா வெந்துடக் கூடாது, 70 சதவீதம் மட்டும் வெந்திருக்கணும்.
கமகமக்கும் பச்சை மசாலா தயாரிப்பு
மட்டன் வேகுற நேரத்துல, இன்னொரு பாத்திரத்துல ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்துங்க. அதுல வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து மிதமான தீயில வதக்குங்க. வெங்காயம் பாதி வதங்கினதும் கசகசா, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நல்லா வதக்குங்க. அடுப்பை ஆஃப் பண்றதுக்கு முன்னாடி துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து லேசா வதக்குங்க. (புதினாவும் கொத்தமல்லியும் கொஞ்சம் தூக்கலா இருந்தா சாப்ஸ் கலரும் டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்). இந்த கலவை ஆறுனதும், மிக்ஸி ஜார்ல மாத்தி கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா நைசா அரைச்சுக்கோங்க.
மசாலாவை சேர்த்து வேகவைக்க
குக்கர் பிரஷர் அடங்கினதும் மூடியை திறங்க. ஏற்கனவே 70% வெந்திருக்கற மட்டன்ல, நாம அரைச்சு வெச்சிருக்கற பச்சை மசாலாவை சேருங்க. மிக்ஸி ஜாரை கழுவி கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணுங்க (நிறைய தண்ணி ஊத்தினா கிரேவி தண்ணியாட்டம் ஆகிடும்). கடைசியா உப்பு சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு, குக்கரை மூடி மறுபடியும் 3 விசில் விடுங்க.
குக்கர் முழுசா ஆறுனதும் மூடியை திறந்தா... மேல எண்ணெய் மிதக்க, கமகமக்கும் மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சாப்ஸ் ரெடி! உங்களுக்கு கிரேவி இன்னும் திக்கா வேணும்னா, மூடியை திறந்து வெச்சே ரெண்டு நிமிஷம் கொதிக்க விடலாம். இந்த வீக்கெண்ட்ல சுடச்சுட சாதம், சப்பாத்தியோட இந்த மட்டன் சாப்ஸை பரிமாறினா, வீட்ல இருக்கறவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Fresh Mutton Tips: மட்டன் வாங்குறீங்களா? ஃப்ரெஷ்ஷான, பஞ்சு மாதிரி மட்டன் வாங்க சூப்பர் டிப்ஸ்!

