MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Samantha Favorite Thayir Vadai : நடிகை சமந்தாவுக்கு பிடித்த ஹோட்டல் தயிர் வடை..வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி?

Samantha Favorite Thayir Vadai : நடிகை சமந்தாவுக்கு பிடித்த ஹோட்டல் தயிர் வடை..வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி?

Samantha Thayir Vadai :நடிகை சமந்தா நினைவுகூர்ந்த தயிர் வடையை வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் செய்யலாம். மென்மையான உளுந்து வடை, சுவையான தயிர் கலவை, மணக்கும் கடுகு தாளிப்பு என தயிர் வடை செய்முறை, தேவையான பொருட்கள் மற்றும் சுவை கூடுதல் டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 23 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சமந்தாவுக்கு பிடித்த ஹோட்டல் தயிர் வடை
Image Credit : Gemini Ai + @SonyLIVTamil youtube

சமந்தாவுக்கு பிடித்த ஹோட்டல் தயிர் வடை

பள்ளிப் பருவத்தில் சாப்பிட்ட ஒரு உணவு, பல ஆண்டுகள் கடந்தாலும் நம்முடைய நினைவுகளை அப்படியே மீட்டுக் கொண்டுவரும். அப்படித்தான் நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கும் தயிர் வடை தொடர்பான ஓர் இனிமையான நினைவு இருக்கிறது.

சமீபத்தில் அவர் பங்கேற்றுவரும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில், பல்லாவரத்தில் உள்ள துர்கா ஹோட்டரில் சாப்பிட்ட தயிர் வடையை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

மெத்தென்ற உளுந்து வடை, அதில் ஊறிய கெட்டியான தயிர், மேலே தூவப்படும் காரசாரமான மிளகாய்த் தூள், மணக்கும் கடுகு தாளிப்பு என தயிர் வடையைப் பார்த்தாலே சாப்பிடத் தோன்றும்.

ஹோட்டலில் கிடைக்கும் அதே சுவையை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா என்று நினைக்கிறீர்களா? சரியான பக்குவத்தில் வடை செய்து, தயிரைத் தயாரித்து, சுவையான தாளிப்பைக் கொட்டினால் நிச்சயம் அசத்தலாம்.

நடிகை சமந்தாவின் தயிர் வடை நினைவைத் தொடர்ந்து, வீட்டிலேயே இந்தச் சுவையான சிற்றுண்டியை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தயிர் வடை செய்யத் தேவையான பொருட்கள்

  • முழு வெள்ளை உளுந்து - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

கெட்டியான, அதிகம் புளிக்காத தயிர் - 2 கப்

தாளித்துக் கொட்டத் தேவையான பொருட்கள்

  • எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • உளுந்து - 1\2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • முந்திரிப் பருப்பு - 5 முதல் 6 (விருப்பப்பட்டால்)
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
தயிர் வடை செய்முறை - படி 1
Image Credit : Gemini Ai

தயிர் வடை செய்முறை - படி 1

உளுந்தை ஊறவைக்கவும்

முதலில் உளுந்தை நன்றாகக் கழுவி, 4 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு, நைஸாக அரைத்துக்கொள்ளவும். மாவு மிகவும் தண்ணீராக இருக்கக்கூடாது. கெட்டியாகவும், காற்றோட்டமாகவும் இருந்தால்தான் வடை மென்மையாக வரும். அரைத்த மாவில் உப்பு சேர்த்துக் கலக்கவும்.

38
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

வடைகளைப் பொரிக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காயவைக்கவும். கையில் சிறிது தண்ணீர் தொட்டு, மாவை எடுத்து நடுவில் துளையிட்டு வடையாக எண்ணெயில் விடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். அதிகத் தீயில் பொரித்தால் வெளியே மட்டும் நிறம் மாறி, உள்ளே சரியாக வேகாமல் போகலாம்.

48
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

வடையை மென்மையாக்கவும்

இதுதான் தயிர் வடையின் முக்கியமான ரகசியம். ஒரு பாத்திரத்தில் தயிரை தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும். பொரித்த வடைகளை அதில் சுமார் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பின்னர் ஒவ்வொரு வடையையும் உடையாமல் மெதுவாக அழுத்தி அதிகப்படியான தண்ணீரை நீக்கவும். இந்த முறையால் வடை மென்மையாகி, தயிரை நன்றாக உறிஞ்சிக்கொள்ளும்.

விருப்பப்பாடால் வாசனைக்காக தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து மோர் கலவையில் சேர்க்கலாம். கட்டாயம் இல்லை.

58
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

சுவையான தயிர் கலவையைத் தயாரிக்கவும்

மற்றொரு பாத்திரத்தில் கட்டியான தயிரை நன்றாகக் கடைந்து, அதில் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதிகம் புளித்த தயிரைப் பயன்படுத்த வேண்டாம். அப்படிப் பயன்படுத்தினால் தயிர் வடையின் சுவை மாறிவிடும்.

68
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

தாளித்துக் கொட்டுவது எப்படி?

ஒரு சிறிய தாளிப்புக் கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். முதலில் கடுகு சேர்த்துப் பொரியவிடவும். பின்னர் உளுந்து, சீரகம் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். கடைசியாகப் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இந்தத் தாளிப்பைத் தயிர் கலவையில் சேர்த்துக் கலக்கவும். கடுகின் மணமும், கறிவேப்பிலையின் வாசனையும் தயிர் வடைக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

78
படி 6
Image Credit : Gemini Ai

படி 6

தயிர் வடையைப் பரிமாறவும்

ஒரு அகலமான பாத்திரத்தில் ஊறவைத்த வடைகளை அடுக்கவும். அதன் மீது தயிர் கலவையைத் தாராளமாக ஊற்றவும். வடைகள் தயிரில் முழுமையாக மூழ்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பரிமாறுவதற்கு முன்பு துருவிய கேரட், கொத்தமல்லி, காராபூந்தி ஆகியவற்றைத் தூவினால் சுவையும் தோற்றமும் அருமையாக இருக்கும்.

88
தயிர் வடை ரெடி
Image Credit : Gemini Ai

தயிர் வடை ரெடி

சமந்தாவுக்கு நினைவுகளை மீட்டுத் தந்த தயிர் வடையைப் போல, நீங்களும் வீட்டில் செய்து குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளலாம். ஒரு சாதாரண மாலை நேரச் சிற்றுண்டியாக மட்டுமல்லாமல், விருந்தினர்களுக்கும் செய்து கொடுக்க ஏற்ற உணவு இது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Recommended image2
Instant Acidity Relief: சாப்பிட்டதும் நெஞ்சில் எரிகிறதா? அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம்!
Recommended image3
மொறுமொறு சிப்ஸ் பின்னால் ஒளிந்திருக்கும் நஞ்சு... உடலுக்குள் மெல்லப் பரவும் 5 ஆபத்துகள்; பகீர் பின்னணி!
Related Stories
Recommended image1
Kerala Style Kappa Puzhukku : கேரளா ஸ்டைல் கப்பா புழுக்கு.. தேங்காய் மணத்துடன் அசத்தும் பாரம்பரிய உணவு!
Recommended image2
Bitter Gourd Fish Fry : பாகற்காய் மீன் பிரை..கசப்பே தெரியாமல் மொறுமொறுவென செய்யலாம்! அசத்தல் செய்முறை இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved