MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • கூந்தல் வளர்ச்சிக்கு ஷாம்பு 'எப்படி' போடனும்? பலர் தெரியாம செய்யும் தவறு!!  

கூந்தல் வளர்ச்சிக்கு ஷாம்பு 'எப்படி' போடனும்? பலர் தெரியாம செய்யும் தவறு!!  

கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க ஷாம்பு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 05 2025, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Shampooing Daily or Weekly Once Which Is Better For Hair Health

Shampooing Daily or Weekly Once Which Is Better For Hair Health

தலைமுடி பராமரிப்பில் முக்கிய பங்கு வைப்பது ஷாம்பு. நாம் ஒவ்வொருவரும் குளிக்கும் போது கண்டிப்பாக ஏதேனும் ஒரு ஷாம்பு பயன்படுத்துபவராக இருப்போம். ஒருவேளை ஷாம்பு பயன்படுத்தாதவர்கள் சீயக்காய் பயன்படுத்தலாம்.  ஆனால் தலைமுடிக்கு கண்டிப்பாக ஏதேனும் ஒரு பொருளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தலை முடிக்கு எப்போதெல்லாம் ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. சிலர் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். சிலர் வாரம் ஒருமுறை மட்டும் அதை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இந்த பதிவில் தலைமுடியை பராமரிக்க ஷாம்புவை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
தினமும் ஷாம்பு:

தினமும் ஷாம்பு:

 தினமும் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவதால் வியர்வை, அழுக்கு, எண்ணெய் பிசுக்கு போன்றவை நீங்கி உச்சந்தலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். தலைமுடியில் எந்த அழுக்கும் சேராமல் துர்நாற்றம் வீசாமல் முடியை பராமரிக்க தினமும் ஷாம்பு உபயோகப்படுத்தலாம். 

37
யாருக்கு தினமும் ஷாம்பு நல்லது?

யாருக்கு தினமும் ஷாம்பு நல்லது?

- பொதுவாக நம்முடைய உச்சந்தலையில் முடியை ஈரப்பதமாக வைக்கக்கூடிய ஒரு வித இயற்கை எண்ணெய் உற்பத்தியாகும். இது தலைமுடியை எண்ணெய் பசையாகவும், தளர்வாகவும் வைத்திருக்கும். தினமும் ஷாம்பு போட்டு குளித்தால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் பொருந்தாது. எண்ணெய் பசை உள்ள கூந்தல் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். 

- சிலருக்கு தலையில் அதிகப்படியான எண்ணெய் வியர்வை போன்றவை படிவதால் பொடுகு அரிப்பு பூஞ்சை தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் அவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது அந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். 

- தினமும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்கொள்பவர்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பது தலைமுடியை அழுக்கில் இருந்து பாதுகாக்கும். 

47
தினசரி ஷாம்பு போடுவதன் தீமைகள்:

தினசரி ஷாம்பு போடுவதன் தீமைகள்:

தினமும் ஷாம்பு போடுவது அல்லது அடிக்கடி ஷாம்பு போட்டு குளிப்பது தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கி முடியை வறட்சியாக்கும்.  இதனால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம். அதிக ரசாயனங்கள் உள்ள ஷாம்பு உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்கலாம். தலைமுடியில் ஈரப்பதம் நீங்குவதால் சிவத்தல், அரிப்பு, உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். முடியை பலவீனமாக்கும். 

57
வாரம் ஒரு முறை ஷாம்பு:

வாரம் ஒரு முறை ஷாம்பு:

சுருள் முடி கொண்ட பலர் வாரம் ஒரு முறை மட்டுமே ஷாம்பு உபயோகிக்க விரும்புகிறார்கள். இதனால் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்கள் நீங்காமல் முடியை பாதுகாக்க உதவும்.  முடியை வாரம் ஒரு முறை மட்டுமே ஷாம்பு போட்டு கழுவுவதால் இயற்கை எண்ணெய் முடியில் பரவ வாய்ப்பளிக்கிறது.  இதனால் முடி உதிர்வு குறைகிறது. ஷாம்புகளில் உள்ள சல்பேட்டுகள், பாரபெண்கள் முடியை வறட்சிக்குள்ளாக்கும். மாறாக அவ்வப்போது ஷாம்பு பயன்படுத்துவதால் முடி வலிமையாக இருக்கும். 

67
வாரம் ஒருமுறை ஷாம்பு போடுவதன் தீமைகள்:

வாரம் ஒருமுறை ஷாம்பு போடுவதன் தீமைகள்:


எண்ணெய் பசையுள்ள முடி உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தலைமுடியைக்கு ஷாம்பு போட்டால் தலைமுடியை எண்ணெய் பசையாகவே இருக்கும். அடர்த்து குறைவாகிவிடும். வாரம் ஒரு முறை ஷாம்பு பயன்படுத்துவதால் வியர்வை இறந்த செல்கள் உள்ளிட்டவை உச்சந்தலையில் படிந்து எரிச்சல் அரிப்பு பொடுகு போன்றவற்றை ஏற்படுத்தலாம். 

77
தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது எப்படி?

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது எப்படி?

- இயற்கையாகவே எண்ணெய் பசையுள்ள முடியை கொண்டவர்கள் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை தடுக்க இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஷாம்பு பயன்படுத்தலாம். 

- வறட்சியான அல்லது சுருள் முடி கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைக்க, முடி உதிர்வதை குறைக்க வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. 

- அடர்த்தி குறைவான மெல்லிய முடி விரைவில் எண்ணெய் பசையை உறிஞ்சி கொள்ளும். இவற்றை ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறை கழுவுவது சிறந்தது. 

- அடர்த்தியான அல்லது கரடுமுரடான முடி இருப்பவர்கள் வாராத்தில் 1 முறை ஷாம்பு போடலாம். சல்பேட் இல்லாத ரசாயனம் குறைவாக கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Moringa Powder Benefits: முகம் 10 வயசு குறைஞ்ச மாதிரி தெரியணுமா? முருங்கை இலை செய்யும் மாயாஜாலம்..!
Recommended image2
Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Recommended image3
Nalangu Maavu: சோப்புக்கு குட்பை... நலங்கு மாவுக்கு வெல்கம்! வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
உங்க தலைமுடிக்கு சரியான ஷாம்புவை தேர்வு செய்ய சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
உங்க ஷாம்புல இந்த '3' கலந்து யூஸ் பண்ணுங்க; முடி நீளமாக வளரும்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved