MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • உங்கள் முடி கருப்பாக மாற இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

உங்கள் முடி கருப்பாக மாற இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

உங்கள் முடியை இயற்கையாகவே கருப்பாக்க மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கண்டிப்பாக இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 08 2023, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஒவ்வொரு பெண்ணும் தனது தலைமுடி எப்போதும் அடர்த்தியாகவும், கருப்பாகவும் வைத்திருக்க பல்வேறு வலிகளையும் பலவித பொருட்களையும் உபயோகிக்கின்றனர். ஆனால் அவற்றின் மூலம் அவர்களுக்கு எவ்வித பலனும் கிடையவில்லை. மாறாக முடி இன்னும் உயிரற்றதாகவும், பலவீனமாகவும் தோன்றுகிறது. இதற்குக் காரணம் முடியை அவ்வப்போது பராமரிக்காததுதான். இதனால் முடியில் உள்ள இயற்கையான பிரகாசம் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. நீங்களும் இந்த மாதிரியான பிரச்சனையை எதிர்கொண்டால், இங்கு கூறப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து உங்கள் தலைமுடியை இயற்கையாக கருப்பாக்கவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

வெந்தயத்தை கூந்தலில் தடவவும்:

வெந்தயம் கூந்தலுக்கு நன்மை பயக்கும். இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இயற்கையாகவே கருப்பாகவும், பளபளப்பாகவும் மாற்றும் சக்தி இவற்றிற்கு உண்டு. வெந்தயத்தை தலைக்கு பயன்படுத்தும் முறையை பார்க்கலாம் வாங்க

தேவையான பொருள்:

வெந்தயம்  தேவையான அளவு
மருதாணி தூள் - 1 தேக்கரண்டி
இண்டிகோ பவுடர் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் இண்டிகோ பவுடர் கலந்து தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு, வெந்தயத்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதில் மருதாணி தூள் மற்றும் இண்டிகோ பேஸ்ட் போட்டு நன்கு கலக்கவும். அதன் பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். 2 மணி நேரம் கழித்து இதனை பிரஷ் மூலம் உச்சந்தலையில் தடவி, நன்கு காய்ந்த பிறகு தலை குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கூந்தல் இயற்கையாகவே கருப்பாக மாற்றவும்.

34

ஆலிவ் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய்:

உங்கள் தலைமுடியின் பிரகாசத்தை பராமரிக்க நீங்கள் ஆலிவ் எண்ணெய் மற்றும் நெல்லிக்காயைப் பயன்படுத்துங்கள். இவை இரண்டையும் நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொழி இயற்கையாகவே கருப்பாக மாறும். இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க

தேவையான பொருள்:
ஆம்லா எண்ணெய் - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:
உங்கள் முக்கூந்தல் இயற்கையாகவே கருப்பாக மாற்ற முதலில் ஒரு கிண்ணத்தில் அம்லா எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த இரண்டையும் இந்த இரண்டு எண்ணெயையும் நன்கு கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும் பிறகு 30 நிமிடம் அப்படியே விடவும். அதன் பின்னர் நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் ஷாம்புவை உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தி குளிக்கவும். நீங்கள் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை இதனை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கூந்தல் கருப்பாகவும் அழகாகவும் மாறும்.

44

கூந்தலை கருப்பாக்க பல பொருட்கள் விற்கப்படுகிறது. ஆனால் இயற்கையான கருமையான கூந்தலை நீங்கள் விரும்பினால், இந்த வீட்டு வைத்தியத்தை நீங்கள் முயற்சி செய்யலாம். இது தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது மிகவும் எளிது.

இதையும் படிங்க: World Food Safety Day 2023: தரமான உணவு.. ஆரோக்கியமான வாழ்வு!! உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று!!

முக்கிய குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் முடி அமைப்பும் வித்தியாசமாக இருக்கும். மேலே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. நீங்கள் உங்கள் நிபுணரிடம் ஆலோசித்த பின்னர் அவற்றைப் பயன்படுத்தவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved