MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Papaya Salad: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பப்பாளி சாலட்: எப்படி செய்வது?

Papaya Salad: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பப்பாளி சாலட்: எப்படி செய்வது?

பழுக்காத பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இ நிறைவாக உள்ளது. இதில் என்சைம்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைவான அளவில் நிரம்பியுள்ளது. இது உங்களை ஆரோக்கியமாகவும், மிக வலிமையாகவும் வைத்திருக்கச் செய்யும்.

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 02 2023, 08:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
papaya

papaya

பழங்களை சாப்பிட்டு வருவதால், நம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதில் ஒரு பழம் தான் பப்பாளி. பழுத்த பப்பாளி பழத்தை, நாம் அடிக்கடி சாப்பிட்டால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால், பழுக்காத பப்பாளியை உணவில் சேர்த்துக் கொண்டால், இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, அத்தனை நன்மைகள் நிறைந்திருக்கிறது. பழுக்காத பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இ நிறைவாக உள்ளது. இதில் என்சைம்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைவான அளவில் நிரம்பியுள்ளது. இது உங்களை ஆரோக்கியமாகவும், மிக வலிமையாகவும் வைத்திருக்கச் செய்யும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
papaya

papaya

பழுக்காத பப்பாளி

பழுக்காத பப்பாளியை தினந்தோறும் கூட சாப்பிட்டு வரலாம். பப்பாளியை நாள்தோறும் உண்பதால் உடல் எடை குறையும். மேலும், வயிற்றில் இருக்கும் நச்சுக்களை அகற்றுவதிலும் பெரிய பங்காற்றுகிறது. அவ்வகையில், நம் உடலுக்கு நன்மைகளை அள்ளித் தரக்கூடிய பப்பாளி சாலட்டை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

36

தேவையானப் பொருட்கள்  

பழுக்காத பப்பாளி - 1
மாதுளம் பழம் - 1
ஆப்பிள் - 1
கேரட் - 1
தக்காளி - 1
சிவப்பு மிளகாய் - 2
எலுமிச்சம் பழம் - 1
நிலக்கடலை - 50 கிராம்
வெள்ளைப்பூண்டு - 4 பல்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
புதினா - 10 இலைகள்
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் அளவு
உப்பு - தேவையான அளவு

46

செய்முறை

முதலில் பூண்டு மற்றும் சிவப்பு மிளகாயை எடுத்து, இடிகல்லில் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பிறகு, சிறிய வெங்காயம், கொத்தமல்லி இலை சிறிதளவு மற்றும் நான்கைந்து புதினா இலைகளை எடுத்துக் கொண்டு சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர், பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சாலட்டுக்குத் தேவையான மிக்சிங் கலவை தயாராகி விடும்.

56

பழுக்காத தோல் சீவிய பப்பாளி மற்றும் கேரட் ஆகிய இரண்டையும் காய்கறி துருவலில் மெலிதான சிலைஸ்களாக சீவிக் கொள்ள வேண்டும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள், தக்காளி மற்றும் மாதுளம் பழ விதைகளை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மிக்சிங் கலவையை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

குழந்தைகளுக்கு சத்தான கீரை காரப் பொங்கல் இப்படி செய்து கொடுங்கள்!

66

கொத்தமல்லி இலை மற்றும் நான்கைந்து புதினா இலைகளை பொடிப் பொடியாக நறுக்கி இதில் தூவி விட வேண்டும். வறுத்த நிலக்கடலையை இடிக்கல்லில் ஒன்றிரண்டாக இடித்துக் கொண்டு, சாலட்டுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். உப்பை சரிபார்த்து தேவையான அளவு மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான, ஆரோக்கியமான பப்பாளி சாலட் தயாராகி விடும்.

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Recommended image2
கோடையில் பளபளப்பான சருமம் பெற சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி?
Recommended image3
Grey Hair: கெமிக்கல் டை வேண்டாம்! நரைமுடியை இயற்கை முறையில் கருப்பாக்க ஆசையா? இதோ வழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved