MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை.. ஒரே தீர்வு 'பூண்டு' இப்படி யூஸ் பண்ணுங்க!!

முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை.. ஒரே தீர்வு 'பூண்டு' இப்படி யூஸ் பண்ணுங்க!!

Garlic For Hair Problems : முடி தொடர்பான பல பிரச்சினைகளுக்கு பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 12 2025, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை.. ஒரே தீர்வு 'பூண்டு' இப்படி யூஸ் பண்ணுங்க!!

முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை.. ஒரே தீர்வு 'பூண்டு' இப்படி யூஸ் பண்ணுங்க!!

பூண்டு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஒரு அருமருந்தாகும். பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வாரி வழங்குகின்றது. பூண்டு சமையலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். பூண்டை பச்சையாகவோ அல்லது பொடியாகவோ பயன்படுத்தினாகும் சரி அது முடி வளர்ச்சிக்கும்,  தலைமுடியின் பல பிரச்சினைகளை சரி செய்யவும் உதவுகிறது. 

24
முடி வளர்ச்சிக்கு பூண்டி எவ்வாறு உதவுகிறது?

முடி வளர்ச்சிக்கு பூண்டி எவ்வாறு உதவுகிறது?

பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, துத்தநாகம், செலினியம், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூந்தி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும் பூண்டு முடி உதிர்வதை குறைத்து, முடி வளர்ச்சிக்கு அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளன. அதுபோல பூண்டில் இருக்கும் சல்பர் மற்றும் செலினியம் முடியின் தண்டுகளின் அமைப்பை வலுப்படுத்த உதவுவதாக நிரூபித்துள்ளனர்.

இதையும் படிங்க:  தலைமுடி நீளமா அடர்த்தியா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

34
பூண்டின் பண்புகள்:

பூண்டின் பண்புகள்:

1. பூண்டில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுக்களால் ஏற்படும் உச்சந்தலை பிரச்சனைகளை சரி செய்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

2. பூண்டை பொடியாக்கி அதை உச்சந்தலையில் தடவினால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, பொடுகு பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.

3. தூண்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும்.

4. பூண்டு வைட்டமின் சியின் நல்ல மூலமாகவும் இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

44
தலைமுடிக்கு பூண்டை பயன்படுத்துவது எப்படி?

தலைமுடிக்கு பூண்டை பயன்படுத்துவது எப்படி?

உங்களது தலைமுடி பிரச்சனையில் இருந்து விடுபட பூண்டை எண்ணெய்யாக பயன்படுத்தலாம். பூண்டு எண்ணெயில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கும் பண்புகள் உள்ளன. பூண்டு எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்கு சில பூண்டு பற்களை பேஸ்ட் போலாக்கி அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக சூடாக்கவும் பிறகு எண்ணையை ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தவும். ரெண்டு ஸ்பூன் எண்ணெயை எடுத்து உங்களது மிஷின் தலையில் மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க: முடி எலிவால் மாதிரி இருக்கா? ஆமணக்கு எண்ணெய் 'இப்படி' தேய்ங்க

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!
Recommended image2
முடி உதிர்தலை நிறுத்த '6' சிறந்த வழிகள்
Recommended image3
Winter Skincare Mistakes : குளிர்கால சரும பராமரிப்பில் இதை மட்டும் செய்யாதீங்க! சருமத்தை கெடுக்கும் '5' விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved