- Home
- Gallery
- விபத்தால் எல்லாம் மறந்து போச்சு! கை விரித்த மருத்துவர்கள்.. வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை அஸ்ரிதா!
விபத்தால் எல்லாம் மறந்து போச்சு! கை விரித்த மருத்துவர்கள்.. வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை அஸ்ரிதா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை அஸ்ரிதா ஸ்ரீதர் விபத்தால் தனக்கு நேர்ந்த விபத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக பகிர்ந்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

சின்ன திரை சீரியல் பிரபலங்களுக்கும், திரை பிரபலங்களுக்கு நிகரான ரசிகர்கள் சமீப காலமாக உருவாக்கியுள்ளனர். அதேபோல் பல சீரியல் பிரபலங்களை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்ப்பதாக பல சமயங்களில் கூறி சின்னத்திரை ரசிகர்கள் வருவதையும் பார்க்க முடிகிறது.
இப்படி சீரியல் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதர். கேரளாவைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு புரோடக்ஷன் மேனேஜர் என்பதாலும், இவரின் தயார் ஒரு சீரியல் நடிகை என்பதாலும், இவர்படித்தது , வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
தன்னுடைய மூன்று வயதிலேயே பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அஸ்ரிதா ஸ்ரீதர் வாழ்க்கையில்.. மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது அவருடைய அப்பாவின் உயிரிழப்பு தான். அஸ்ரிதாவுக்கு 15 வயது இருக்கும் போதே, உடல் நல குறைவு காரணமாக இவரின் தந்தை இறந்த நிலையில், பிள்ளைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதாலும், சீரியலில் நடிக்க விருப்பம் இல்லாததால் தொலைக்காட்சி தொடர்களில் இருந்து விலகினார் இவரின் அம்மா.
குடும்ப சூழ்நிலை காரணமாகவும், பொருளாதார கஷ்டங்கள் காரணமாகவும் சம்பாதித்தே ஆக வேண்டும் என்கிற பொறுப்பு அர்ஷிதாவுக்கு வர அவரும் சீரியல்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள் என கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி கொண்டு நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, சொந்த பந்தம், விஜய் டிவி தொடரான நாம் இருவர் நமக்கு இருவர், தேன்மொழி பிஏ போன்ற சீரியலில் நடிப்பு அப்படியே சமீபத்தில் நிறைவடைந்த சரஸ்வதியும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அண்மையில் விஜய் டிவியில் முடிவடைந்த 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் ராகினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க அஸ்ரிதா தற்போது தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அஸ்ரிதாவுக்கு ஏற்பட்ட விபத்தால் அவருடைய மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரின் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனதாக தெரிவித்துள்ளார். அவ்வபோது பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தாலும், அதனை அதிகமாக யோசிப்பதால் தலை வழியில் அவதிப்பட்டதாகவும் அதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னால் தானாக எழுந்து ரெஸ்ட் ரூம் கூட செல்ல முடியாத நிலையால் தான் இருந்தேன். என்னால் நடக்க முடியாது. எந்த சத்தத்தையும் கேட்க முடியாது. மருத்துவர்கள் 10% தான் உயிர் வாழ்வேன் என கை விரித்து விட்டனர். அந்த வாழ்க்கை வெறுத்து போய் விட்டது. எப்போதுமே என் மன உறுதியை நான் கைவிடவில்லை. என் தந்தையின் ஆசீர்வாதமும், மக்களின் அன்பும் தான் என்னை மீண்டும் நடிக்கும் அளவுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பேன் என உணர்வு பூர்வமாக பேசியுள்ளார் அஸ்ரிதா. ரசிகர்களும் வர கூறியதை கேட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.