- Home
- Gallery
- வியர்ட் புரோபோசல்... லவ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க பரீனா சொன்ன பொய்? மருத்துவமனையில் அட்மிட்டான நபர்!
வியர்ட் புரோபோசல்... லவ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க பரீனா சொன்ன பொய்? மருத்துவமனையில் அட்மிட்டான நபர்!
தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான பரீனா தனக்கு வந்த வியர்ட் புரோபோசல் குறித்து... கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Serial actress farina
தொகுப்பாளராக இருந்து, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் பரீனா அசாத். இவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகவும் மோசமான லவ் ப்ரோபோசல் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டார்.
farina
28 வயதாகும் பரீனா அசாத், தன்னுடைய 19 வயதிலேயே ஆங்கரிங் பணியை தேர்வு செய்து பணியாற்ற துவங்கினார். 2014 ஆம் ஆண்டு, 'ஒரு நிமிடம் ப்ளீஸ்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பரீனா இதைத்தொடர்ந்து, கோலிவுட் அண்ட் கட், கிச்சன் கலாட்டா, அஞ்சரை பெட்டி, போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார்.
farina
தொகுப்பாளர் என்பதை தாண்டி, சீரியலிலும் நடிக்க துவங்கிய பரீனா, முதல் முதலில்... அழகு சீரியலில் நிவேதிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் பரீனாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தராத நிலையில், அதிரடியாக சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவினார்.
farina
அந்த வகையில் 2019 முதல் 2023 வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த விஜய் டிவி தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் பரீனாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களை அசரவைத்தார்.
farina
பரீனா கடந்த 2017 ஆம் ஆண்டு, ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்... இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. தன்னுடைய குழந்தை வயிற்றில் இருக்கும்போது வயிற்றைக் காட்டியபடி இவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
farina
தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் பரீனா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு வந்த வியர்ட் புரோபோசல் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, "பரீனாவிடம் ஒரு பையன் தொடர்ந்து லவ் பண்ணுவதாக கூறி டார்ச்சர் செய்து கொண்டிருக்க, அவரை அவாய்ட் செய்யும் நோக்கத்தில் பரீனா, எங்க வீட்ல முஸ்லிம் பையனாக இல்லை என்றால்... கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க என்று பொய் சொல்லி உள்ளார். உடனே அந்தப் பையன் ஹாஸ்பிடல் க்கு போய் முஸ்லிம் பசங்களுக்கு என்ன பண்ணுவாங்களோ அதாவது 'சுன்னத்' செய்து கொண்டு வந்து, தன்னை காதலிக்கும் படி கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இந்த லவ் புரோபோசலை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என கூறியுள்ளார் பரீனா.