கையில் கத்தி.. காதில் கட்டு.. உடல் முழுக்க ரத்தம் - வெளியானது மக்கள் செல்வனின் மகாராஜா பட First Look Poster!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
Nithilan Swaminathan
கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Natarajan
இந்த மகாராஜா திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக், பிரபல ஒளிப்பதிவாளர் நடராஜ், நடிகை மம்தா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
First Look Poster
முன்னதாக கையில் ஒரு சேவிங் செய்ய பயன்படும் கத்தியை வைத்துக்கொண்டு விஜய் சேதுபதி நிற்பது போல ஒரு போஸ்டர் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள First Look போஸ்டரில் முடி திருத்தம் செய்யும் நிலையத்தில் உள்ள ஒரு நாற்கலியில், கையில் கத்தியோடும், காதில் கட்டுகளோடும், உடல் முழுக்க ரத்தத்தோடும் காணப்படுகிறார் விஜய் சேதுபதி.
இந்த படத்தில் முடி திருத்தும் தொழிலாளராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி என்றும், அவர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களே படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.