- Home
- Gallery
- ஒரு வழியா அப்டேட் வந்துருச்சு.. வேகமெடுக்கும் விடுதலை 2.. First Look குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
ஒரு வழியா அப்டேட் வந்துருச்சு.. வேகமெடுக்கும் விடுதலை 2.. First Look குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Viduthalai Part 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வருகின்றது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம்.

viduthalai
கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "விடுதலை". இசைஞானி இளையராஜா இசையில் மெகா ஹிட்டானது அந்த திரைப்படம்.
soori
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் மட்டுமே பயனித்து வந்த நடிகர் சூரி, முதல் முறையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவான திரைப்படம் இது தான்.
viduthalai movie
பிரபல நடிகர் விஜய் சேதுபதி, ரங்கன் வாத்தியார் என்கின்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
Viduthalai 2
விடுதலைப் படத்தின் முதல் பாக ரிலீசுக்கு பிறகு, உடனே இரண்டாம் பாக பணிகள் தொடங்கியிருந்தாலும், சில காரணங்களால் அந்த படம் உருவாவது தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தை அப்படம் எட்டியுள்ள நிலையில், நாளை அந்த படத்தில் First Look போஸ்டர் வெளியாகவுள்ளது.
எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!