- Home
- Gallery
- எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!
எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கிய லட்சுமி' சீரியலில், ஈஸ்வரி மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட அவர் விடுதலையாகும் நிலையில், இனி என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், 'பாக்கிய லட்சுமி' சீரியலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கோபிக்காக தங்கமாய் தன்னை பார்த்து கொள்ளும் மருமகள் பாக்கியலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி ஈஸ்வரி, கோபியுடன் ராதிகா வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு நடந்த களோபரம் ஈஸ்வரியை குற்றவாளி கூண்டில் நிறுத்த வைத்தது.
கோபிக்கு, பேரப்பிள்ளைகள் இருக்கும் நிலையில்.. குழந்தை பிறந்தால் நன்றாக இருக்காது என எண்ணி ஈஸ்வரி ராதிகா கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார். ஆனால் ராதிகாவும் அதே முடிவில் இருந்தாலும்... ராதிகாவின் அம்மா உன்னுடைய வாழ்க்கைக்கு ஏதேனும் பிடிப்பு வேண்டும் என கூறி, மனதை களைத்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முடிவை எடுக்க வைக்கிறார். ராதிகா கர்ப்பம் அனைவருக்கும் தெரியவர, கோபி வீட்டை விட்டே வெளியேற்றப்படுகிறார்.
Anna Serial: சூடாமணியால் ரத்னா - ஷண்முகம் இடையே வந்த பிரச்சனை! நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
ஆனால் ஈஸ்வரி தன்னுடைய மகன் அழைத்த ஒரே காரணத்தால் கோபியுடன் செல்ல முடிவு செய்கிறார். இந்நிலையில் ராதிகாவின் அம்மாவுக்கும், ஈஸ்வரிக்கும் பிரச்சனை முட்டுகிறது. இதனால் ஈஸ்வரியின் உடல்நிலையும் சரி இல்லாமல் போக, ராதிகா கோபியின் கோவத்திற்கு ஆளாகிறார்.
பின்னர் ஈஸ்வரியிடம் பேசிவிட்டு ராதிகா திரும்பும் போது, கீழே கிடந்த பிளவர் வாஷ் மீது ராதிகா கால் வைக்க வழுக்கி விழுந்து... ராதிகாவின் கர்ப்பம் கலைகிறது. இதற்க்கு காரணம் ஈஸ்வரி தான் என ராதிகாவும், அவரின் அம்மாவும் கோபியை நம்ப வைக்கிறார்கள். இதனால் கோபியும் தன்னுடைய அம்மா மீது கோவத்தை நெருப்பாக கக்குகிறார்.
மகளுக்காக ஈஸ்வரி மீது போலீசில் புகார் ராதிகாவின் அம்மா புகார் கொடுக்க, ஈஸ்வரி கைது செய்யப்படுகிறார். பின்னர் கோட்டில் ஆஜர் படுத்தப்பட்ட போது, ஈஸ்வரி குழந்தையை கலைக்க சொன்னது உண்மையா என லாயர் கேட்க, கோபியும் ஆமாம் என கூறுகிறார். எனவே ராதிகாவின் கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தது ஈஸ்வரி தான் என, தீர்ப்பு வழங்குவதற்கு முன் நீதிமன்றத்திற்கு வரும் மயூ, தன்னுடைய அம்மாவை ஈஸ்வரி பாட்டி தள்ளி விடவில்லை என்பதையும் பிளவர் வாஷ் தடுக்கி கீழே விழுந்ததையும் கூறி காப்பாற்றுகிறார்.
இதை தொடர்ந்து ஈஸ்வரி விடுதலை செய்யப்பட, பாக்கியா வீட்டிற்கு தன்னுடைய அம்மாவை பார்க்க வரும் கோபிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஈஸ்வரி, சந்தித்து அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என கோபி கூற, ஏய் விடுடா என ஆத்திரத்தோடு எழுந்திருக்கும் ஈஸ்வரி, எனக்கும் உன்னக்கு உள்ள தாய் - பிள்ளை என்கிற உறவு முடிஞ்சு போச்சு. எனக்கு ஒரே ஒரு மகள் தான். அது பாக்கியா தான் என கூறுகிறார். பின்னர் கோபிநாத் என்கிற ஒருத்தன் என்னுடைய வயித்துல பிறக்கவே இல்லை. இன்னையோடு உன்னை நான் தலை முழுகிறேன் என கூறி நடு வீட்டில் நின்று தலையில் தண்ணீரை ஊற்றுகிறார். இந்த பரபரப்பான தருணம் குறித்த புரோமோ தான் வெளியாகியுள்ளது.