என் பொண்ணு ஹீரோயின் ஆகிட்டா... அதுக்குள்ள ஜோவிகாவுக்கு இத்தனை பட வாய்ப்புகளா? லிஸ்ட் போட்டு சொன்ன வனிதா
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, பிக்பாஸுக்கு போகும் முன்னரே சினிமாவில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகிவிட்டதாக வனிதா கூறி இருக்கிறார்.
Jovika
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். நேற்றைய ஒரே எபிசோடு மூலம் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக மாறி இருக்கிறார் ஜோவிகா. விசித்ரா அடிப்படை கல்வி அவசியம் என சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஜோவிகா, தனக்கு படிப்பு வராததால் தான் பிடித்ததை செய்வதாக கூறி சண்டை போட்டது தற்போது சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறி உள்ளது.
BiggBoss Jovika
தனது மகளின் பேச்சுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வனிதா, ஜோவிகா பற்றி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அதன்படி கமல்ஹாசன் முதல் எபிசோடில் ஜோவிகாவை டெக்னீஷியன் என கூறியதை சுட்டிக்காட்டிய வனிதா, அவர் இயக்குனர் பார்த்திபனிடம் கடந்த சில மாதங்களாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்ததாக வனிதா கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jovika vijayakumar
மேலும் தன்னிடம் இரண்டு கார்கள் இருந்தாலும், தான் ஜோவிகாவை மெட்ரோ ரயிலில் தான் பார்த்திபன் அலுவலகத்துக்கு அனுப்புவேன் என்றும், அப்படி போனால் தான் அவளுக்கு உதவி இயக்குனர்களின் கஷ்டம் என்ன என்பது புரியும் எனவும் கூறினார். தானும் பி வாசுவிடம் 10 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதாகவும் வனிதா அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
Vanitha daughter jovika
இதையெல்லாம் விட மற்றொரு சர்ப்ரைஸ் ஆன விஷயம் என்னவென்றால் ஜோவிகா பிக்பாஸ் செல்லும் முன்னரே 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட் ஆகிவிட்டாராம். ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படத்தில் ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆன பின்னரே அவர் பிக்பாஸுக்கு சென்றுள்ளதாக வனிதா கூறினார். இதை ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் சொல்லாவிட்டாலும் தான் சொல்வதில் பெருமை கொள்வதாக வனிதா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...அந்த ஒரு டயலாக்கால் லியோ படத்துக்கு வந்த புது சிக்கல்... படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்