ஸ்டிரிக்ட் ஆன மாமனாரா இருக்காரேப்பா... திருமணத்துக்கு முன்னரே அர்ஜுன் மகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டிஷன்..?
ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
thambi ramaiah
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் அர்ஜுன். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, அதன்பின் அப்படியே சினிமாவை விட்டு ஒதுங்கினார். விரைவில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அவரும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
Umapathy, aishwarya Arjun
நடிகர் அர்ஜுன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வைவர் என்கிற ரியாலிட்டி கேம் ஷோவை தொகுத்து வழங்கினார். அந்த ஷோவில் உமாபதியும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் தன் தந்தை அர்ஜுனை பார்ப்பதற்காக ஐஸ்வர்யா அடிக்கடி சர்வைவர் செட்டுக்கு செல்வாராம். அப்போது உமாபதி உடன் ஐஸ்வர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Umapathy, aishwarya Arjun engagement
ஐஸ்வர்யா - உமாபதி ஜோடிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தான் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில், தன் வருங்கால மருமகளுக்கு நடிகர் தம்பி ராமையா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
aishwarya Arjun family
அதன்படி ஐஸ்வர்யா ஏற்கனவே சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர் என்பதால், திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிக்கக் கூடாது என்பது ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமையா போட்டுள்ள கண்டிஷனாம். மாமனாரின் இந்த கண்டிஷனுக்கு ஐஸ்வர்யாவும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஓவர் ரொமான்ஸ் உடம்புக்கு ஆகாது... காதல் ஜோடியை பிரிக்க முடிவெடுத்த ரசிகர்கள் - இந்த வார எலிமினேஷன் இவர்தானா?