MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Guru Peyarchi 2022: மீன ராசியில் குரு - சுக்கிரன் சந்திப்பு...இந்த ராசிகளின் வாழ்வில் பணம் மழையாய் பொழியும்...

Guru Peyarchi 2022: மீன ராசியில் குரு - சுக்கிரன் சந்திப்பு...இந்த ராசிகளின் வாழ்வில் பணம் மழையாய் பொழியும்...

Guru Peyarchi 2022 Palangal: ஜோதிடத்தின், பார்வையில் தேவ குரு வியாழன் கிரகம் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். மீனத்தில் குரு பகவான் இருப்பது எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : May 28 2022, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022:

நவகிரகங்களில் வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. புராணங்களின்படி, குரு பிரகஸ்பதி தேவர்களின் குருவாக நம்பப்படுகிறார். அதனால்தான் அவர் தேவகுரு பிருஹஸ்பதி என்று அழைக்கப்படுகிறார்.  மேலும், மகிழ்ச்சி, அறிவு, குழந்தைகள், ஆன்மீகப் பணி, தொண்டு, அறம் மற்றும் முன்னேற்றத்திற்கான காரணியாக விளங்குகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

அதேபோன்று, சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார்.  வியாழன் கிரகம் தற்போது அதன் ராசியான மீனத்தில் உள்ளது. இதனுடன், இந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன் கிரகமும் உள்ளது.எனவே, இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது சில ராசிகளுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இருப்பினும், சில அரிய சூழ்நிலைகளில் மட்டுமே, வியாழன் அசுப பலன்களைத் தருகிறது. எனவே, மீனத்தில் தேவகுரு வியாழன் அசுப பலன்களை அண்ட விடாமல்,  எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 
 

36
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

மிதுனம்:

வியாழனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நடந்து முடியும். இந்த காலகட்டம் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
 

46
Guru Peyarchi

Guru Peyarchi

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு, வியாழன் கிரகம் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  இந்த நேரம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும். வேலையில் புது தெம்பு பிறக்கும். சொத்து வாங்கவும் விற்கவும் நல்ல நேரமாக இருக்கும். செல்வம் பெருகலாம்.

56
Pisces

Pisces

மீனம்:

வியாழன் கிரகம் மீன ராசியில் இருப்பதால், மீன ராசிக்காரர்கள் தேவகுரு வியாழன் சிறப்பு பலன்களை தருகிறார். உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். வியாபாரம் பெருகும். ஆடம்பரமும் வசதியும் பெறுவீர்கள்.

66
virgo

virgo

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு தேவ குரு வியாழன் கிரகம்  தொழில்-வியாபாரத்தில் வலுவான ஆதாயங்களைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதன் மூலம் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில், பணியிடம், தொழில், ஆரோக்கியம் என அனைத்திலும்  ஆதாயம் உண்டு.

 மேலும் படிக்க...Sevvai Peyarchi: செவ்வாய் ராசி மாற்றத்தால்..ஜூன் 27 வரை விழிப்புடன் இருக்க வேண்டிய ராசிகள்...உங்கள் ராசி என்ன?

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved