இந்தியாவின் மிகவும் விலை குறைந்த பைக்.. விலை இவ்வளவு தானா.? முழு விபரம் இதோ !!
இந்தியாவின் விலை குறைந்த ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விலை எவ்வளவு, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸின் அம்சங்களைப் பற்றி பார்க்கும்போது, டியூப்லெஸ் டயர், சைட் ஸ்டாண்ட் திறந்திருக்கும் போது இன்ஜின் ஷட் ஆஃப் அம்சம், டிசி ஹெட்லைட், டூ-வே இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச் மற்றும் காம்பி பிரேக் சிஸ்டம் (CBS) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த பைக் 20 சதவிகிதம் எத்தனாலில் இயங்கக்கூடிய BS 2 ஆம் கட்டத்தை ஆதரிக்கிறது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா-ன் (HMSI) புதிய சிடி 100 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 73,400 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும். மலிவு விலையில் வரும் இந்த பைக், நாட்டின் மலிவான பைக்குகளில் ஒன்றாக இருக்கும்.
புதிய ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு ஷைன் 100 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானிய பிராண்ட் அதன் பயணிகள் வரம்பை மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறலாம். 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் மொத்தம் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
அதாவது பிளாக் வித் ரெட், பிளாக் வித் ப்ளூ, பிளாக் வித் கிரீன் மற்றும் பிளாக் வித் கிரே ஆகும். 2023 CD110 Dream Deluxe ஆனது 109.51 cc 4-ஸ்ட்ரோக் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 7500 rpm இல் 6.47 kW இன் உச்ச ஆற்றலையும், 5500 rpm இல் 9.30 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.
நீங்கள் இந்த பைக்கை வாங்கினால், உங்களுக்கு 10 வருட வாரண்டி பேக்கேஜ் கிடைக்கும், இதில் நிலையான 3 வருட வாரண்டியும், விருப்பமான 7 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் அடங்கும்.