தளபதி 68.. No சொல்லிட்டாரா ஜோ? வேறு நடிகையிடம் நடக்கும் பேச்சுவார்த்தை - அவங்க விஜய் கூட 6 படம் நடிச்சவங்களாம்
தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் முழு வீச்சில் உருவாகி வருகிறது, ஏற்கனவே இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகளையும் டப்பிங் பணிகளையும் தளபதி விஜய் முடித்த நிலையில், தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்கி உள்ளார்.
Director Venkat Prabhu
முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் அவர்கள், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்கான அனிமேஷன் அமைக்கும் பணிகள் வெளிநாட்டில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
Kollywood Actress Priyanka Mohan
இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் தந்தை மகன் என்று இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இளைய விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்த திரைப்படத்திற்காக தளபதி விஜய் அவர்கள் சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Actress Jyothika
இது ஒருபுறம் இருக்க இந்த திரைப்படத்தில் மூத்த விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஜோதிகா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும். முதலில் அவர் ஒப்புக்கொண்டு அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது வேறு ஒரு நடிகையுடன் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
Actress Simran
ஏற்கனவே தளபதி விஜய் அவர்களுடன் உதயா, ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பிரியமானவளே உள்ளிட்ட ஆறு திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை சிம்ரனிடம் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த முழு தகவலும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
ரஜினிகாந்தை தொடர்ந்து நெல்சனுக்கு செக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்!