தலைவருக்கே விபூதி அடித்த ரெட் ஜெயண்ட்ஸ்... பொங்கல் ரேஸில் இருந்து விலகும் லால் சலாம்..? பின்னணி என்ன?
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் பொங்கல் ரேஸில் இருந்து விலக உள்ளதாகவும் அதற்கு ரெட் ஜெயண்ட்ஸ் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
lal salaam, udhayanidhi
தீபாவளி, பொங்கல் என்றாலே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி நடித்துள்ள ஜப்பான் மற்றும் விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. அதேபோல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள படங்களும் தற்போதே உறுதியாகிவிட்டன.
aishwarya rajinikanth
அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த அயலான் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் 4-ம் பாகமும் பொங்கல் ரிலீஸை உறுதி செய்துள்ளது. கடைசியாக இந்த ரேஸில் இணைந்த திரைப்படம் தான் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
Rajinikanth daughter aishwarya
இப்படம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு வதந்தி பரவியது. அதன்படி லால் சலாம் படத்திற்காக மும்பையில் ரஜினியை வைத்து படமாக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டிஸ்க் வேலை செய்யவில்லை என்றும், அதனால் அப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலக ரெட் ஜெயண்ட் தான் காரணம் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ayalaan
அயலான், அரண்மனை 4, லால் சலாம் ஆகிய மூன்று படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் தான் வாங்கி உள்ளதாம். ஒரே நாளில் தங்களது 3 படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர் பங்கீட்டில் குழப்பம் ஏற்படும் என கருதி, அரண்மனை 4 அல்லது லால் சலாம் ஆகிய இரு படங்களில் ஏதேனும் ஒன்றை தள்ளிவைக்க திட்டமிட்டு இருக்கிறார். அயலான் ஏற்கனவே பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதில் கைவைக்கவில்லையாம்.
Aranmanai 4
முதலில் அரண்மனை 4 படத்தை தள்ளிவைக்குமாறு சுந்தர் சி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அவரோ இது பேமிலி ஆடியன்ஸுக்காக எடுத்த படம் கண்டிப்பாக பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யவேண்டும், நீங்கள் மாற்ற முடிவு செய்தால் நானே இப்படத்தை ரிலீஸ் செய்து கொள்கிறேன் என்று கராராக சொல்லிவிட்டாராம். இதனால் வேறு வழியின்றி லால் சலாம் படத்தை தள்ளிவைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
udhayanidhi stalin
இதன்மூலம் பொங்கல் ரேஸில் இருந்து லால் சலாம் விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படத்தை ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விடுமுறையில் திரைக்கு கொண்டு வரும் ஐடியாவில் உள்ளதாம் ரெட் ஜெயண்ட்ஸ். ரஜினி நடித்த லால் சலாம் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ள தகவல் தான் தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் ‘முத்தழகு’ பிரியாமணியின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ