- Home
- Gallery
- கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகியும் ஏன் குழந்தை பெத்துக்கல... முதன்முறையாக விளக்கம் அளித்த சாந்தனு கிகி ஜோடி
கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகியும் ஏன் குழந்தை பெத்துக்கல... முதன்முறையாக விளக்கம் அளித்த சாந்தனு கிகி ஜோடி
திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாது ஏன் என்பது பற்றி சாந்தனு - கிகி ஜோடி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளனர்.

Shanthnu and Kiki
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். அதுமட்டுமின்றி நடிப்பிலும் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு சாந்தனு என்கிற மகன் இருக்கிறார். தன்னைப்போல் தன் மகனும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய பாக்யராஜ், அவரை சக்கரக்கட்டி என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
Shanthnu wife keerthi
இதையடுத்து சித்து ப்ளஸ் 2, அம்மாவின் கைபேசி, இராவணக்கோட்டம் என ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இந்த நிலையில், அவர் நீண்ட நாள் காத்திருந்ததற்கு பலனாக அவருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி ஜெய்குமார் இயக்கத்தில் அசோக் செல்வனும் சாந்தனுவும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... ப்ளூ ஸ்டார் கவின் நடிக்க வேண்டிய படம்... கடைசி நேரத்தில் கைநழுவிய வாய்ப்பு- அவர் நடிக்க இருந்த கேரக்டர் இதுவா?
Shanthanu family
சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் மீட்டும் நடத்தப்பட்டது. இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றிக்கு பின்னர் தன் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தது தனக்கு மிகவும் திருப்தி அளித்ததாக சாந்தனு கூறி இருக்கிறார். நடிகர் சாந்தனு, கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் கிகி என்கிற கீர்த்தனாவை தான் காதலித்து கரம்பிடித்தார். கீர்த்தி தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
Shanthanu about baby delay
இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி உடன் ஜோடியாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாந்தனு, குழந்தை பெற்றுக்கொள்ளாததால் தாங்கள் சந்திக்கும் கஷ்டங்களை பற்றி தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். ஏதாச்சும் கல்யாணத்துக்கு போனாலே அடுத்து உங்களுக்கு தான என குழந்தை பற்றி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள், நாங்கள் இருவருமே தற்போது எங்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் எது எது எந்த நேரத்துல நடக்கணுமோ அது அது அந்த நேரத்துல நடக்கும் என கூறினார்.
இதையடுத்து பேசிய கீர்த்தி, நாங்கள் குழந்தையே பெத்துக்க கூடாதுனு முடிவெடுக்கல. எது வரவேண்டுமே அது சரியான நேரத்தில் வரும். உங்க வீட்ல நடக்குறத நீங்க பாருங்க, எங்க வீட்ல நடக்குறத நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்கிற பஞ்ச் மூலம் குழந்தை பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கீர்த்தி.
இதையும் படியுங்கள்... என் பொண்டாட்டிக்கு அப்படி ஒரு வியாதி இல்ல.. ஆனா.. - இன்ஸ்டாவில் அட்ராசிட்டி பண்ணும் சாந்தனு & கிக்கி விஜய்!