Raayan Update: 'ராயன்' படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை! இவர்தான் தனுஷுக்கு ஜோடியா? வெளியான நியூ அப்டேட்!
தனுஷ் இயக்கி நடிக்க உள்ள 50-ஆவது படமான 'ராயன்' படத்தில் தேசிய விருது நடிகை நடிக்க உள்ள தகவலை போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது படக்குழு.
Director actor Dhanush Raayan story revealed
'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷ் 50வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் இருந்து கடந்த வாரம் வெளியான ஃபர்ஸ்ட் லுக் படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், தற்போது படக்குழுவினரின் புகைப்படம் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
Raayan
அதன்படி இந்த படத்தில், தனுஷுடன் இணைந்து... காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பது உறுதியானது. இதை தொடர்ந்து சற்று முன் இப்படத்தில் தேசிய விருது நடிகையான, 'அபர்ணா பாலமுரளி' நடித்துள்ள தகவலை போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது படக்குழு. மேலும் இவர் தான் தனுஷின் ஜோடியா? எங்கிற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
'ராயன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள், முழுவதும் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தாப்ரோது படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. இதன் காரணமாகவே தினம் தோறும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் - நடிகைகளின் போஸ்டர் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருப்பு வெள்ளையில் இருக்கும் இந்த ஐந்து போஸ்டர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே பா.பாண்டி படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்பதை தனுஷ் நிரூபித்து விட்ட நிலையில், தன்னுடைய 50-ஆவது படத்தை, சர்வதேச தரத்துடன் இயக்கி உள்ளார் என எஸ்.ஜே.சூர்யா புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது. சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்க்கு, ஏ.ஆர்.ரகுமான்.இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.