MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான கார்த்திக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 16 2024, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
krishnagiri

krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள பேரிகை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(38). இவர் சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார்.  காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் அனிகிரிப்பள்ளி பகுதியில் வசித்து வரும் கார்த்திக்கின் உறவினர் ஒருவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
DMK Leader Murder

DMK Leader Murder

இதுதொடர்பாக, கார்த்திக் அடிக்கடி அனிகிரிப்பள்ளி சென்று, இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நிலம் தொடர்பான வழக்கில் கார்த்திக்கின் உறவினருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அனிகிரிப்பள்ளி சென்றுவிட்டு கார்த்திக் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேரிகை அடுத்த சூலகுண்டா என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கார்த்திக்கை 3 பேர் கொண்ட வழிமறித்து சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பியது. உயிருக்கு போராடிய கார்த்தியை அப்பகுதியினர் மீட்டு ஒசூர் தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். 

34
Police investigation

Police investigation

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், ஒசூர் மேயர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

44
property dispute

property dispute

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் அனிகிரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணப்பா மகன் பிரதாப்(30) உள்பட 3 பேர், நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கார்த்திக்கை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தீவிர தேடிவருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்கு ரம்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved