கோலிவுட்.. ஆகஸ்ட் 15.. நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இரு கிளாசிக் ஹீரோஸ் - வெல்லப்போவது யார்?
Kollywood Movies : இவ்வாண்டின் துவக்கத்தில் சற்று தடுமாறினாலும், கோலிவுட் உலகம் இரண்டாம் பாதியில் சக்கைபோடு போட்டு வருகின்றது.
kanguva
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியை இரு முக்கிய ஹீரோக்கள் குறி வைத்துள்ளனர் என்றே கூறலாம். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் "தங்கலான்" திரைப்படமும், டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் "அந்தகன்" படமும் வெளியாகிறது.
thangalaan
முதல்முறையாக பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தான் "தங்கலான்". தமிழகத்தில் பிரிட்டிஷ்காரர்களுடைய ஆட்சி மெல்ல மெல்ல துவங்கப்பட்ட காலகட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து பல அப்டேட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
vikram
1990களின் துவக்கத்தில், தல தளபதி என்கின்ற மோதல் எழுவதற்கு முன்பே, "டாப் ஸ்டார்" என்ற பட்டத்தோடு பயணித்து வந்த நடிகர் தான் பிரசாந்த். அவருடைய நடிப்பில் (ஹீரோவாக) வெகு காலம் கழித்து "அந்தகன்" என்கின்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இது ஒரு வேற்று மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஆகஸ்ட் 15ம் தேதி தான் வெளியாகிறது.
Andhagan
இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மற்றும் முன்னணி நடிகர் விக்ரம் ஆகிய இருவரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில், இரு திரைப்படங்களுமே பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இப்பொழுது ட்ரெண்டிங்கில் விக்ரம் நல்ல பல திரைப்படங்களை கொடுத்து வருவதால், இது பிரசாந்துக்கு ஒரு கடுமையான போட்டியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.