- Home
- Gallery
- Microsoft முடக்கம்.. இது தான் டிஜிட்டல் அபோகாலிப்ஸா? முன்பே கணித்தாரா கபிலன் வைரமுத்து? ட்ரெண்டகும் "ஆகோள்"!
Microsoft முடக்கம்.. இது தான் டிஜிட்டல் அபோகாலிப்ஸா? முன்பே கணித்தாரா கபிலன் வைரமுத்து? ட்ரெண்டகும் "ஆகோள்"!
Aagol : உலக அளவில் Microsoft நிறுவனத்தின் சேவை முடங்கியுள்ளது, இது தற்செயலாக நடந்தா? இல்லை இது ஒரு இணைய வழி தாக்குதலா? என்று புரியாமல் நிற்கிறது உலகம்.

airports
விமான சேவைகள் முதல், பல்பொருள் அங்காடிகள், வங்கி செயல்பாடுகள் என்று உலக அளவில், மைக்ரோசாப்டின் செயலிழப்பு பல துறைகளை சீர்குலைத்துள்ளது என்றே கூறினாலும் அது மிகையல்ல. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், மானிடம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சிக்கல்களுக்கு அது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
microsoft issue
ஆஸ்திரேலியா நாட்டில் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால், லண்டன் நாட்டு பங்கு சந்தையே பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளது. கண்ணுக்கே தெரியாத ஒரு மென்பொருள் சேவையில் பாதிப்பு, அது இன்று இந்த உலகையே முடக்கிப்போட்டுள்ளது என்பதை நினைக்கும்போது இந்த டிஜிட்டல் உலகில் இணைய வழி தாக்குதல் நடக்க துவங்கிவிட்டதோ என்றே நினைக்க தோன்றுகிறது.
Aagol
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து எழுதிய "ஆகோள்" என்ற ஒரு புத்தகம் இப்பொது வைரலாகி வருகின்றது. கபிலன் வைரமுத்து, அப்பாவை போலவே கவிதை மற்றும் கதை எழுதும் திறன் கொண்டவர். அவர் எழுத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புத்தகம் தான் "ஆகோள்". 2032ம் ஆண்டில், நிதிலன் என்பவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக உருவாக்கப்பட்டது தான் அந்த புத்தகம்.
crowdstrike
"ஜெல்லி" என்ற வைரஸ் இணைய வழியில் உலகை தாக்குகிறது, தரவுகள் பெரிய அளவில் திருடப்படுகிறது. இறுதியில் ஹீரோ நிதிலன் அதை தடுத்தாரா? உலகை அழிவின் விளிம்பிலிருந்து காத்தாரா? என்பது தான் அந்த புத்தகத்தின் சாராம்சம். இந்நிலையில், கபிலனின் "ஆகோள்" புத்தகத்தில் உள்ளது போலத்தான், இணைய வழியில் பெரிய அழிவு நடந்து வருவதாக கூறி, அந்த புத்தகத்தையும் இப்பொது ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
முடங்கிய மைக்ரோசாப்ட்; திண்டாடும் விமான நிறுவனங்கள் - மதுரை, திருச்சியில் விமானங்கள் ரத்து