- Home
- Gallery
- உடற்பயிற்சி இல்லை.. ரன்னிங் கூட செய்யல.. 21 நாளில் எப்படி உடலை குறைத்தேன்? - வியக்கவைத்த மாதவனின் டயட்!
உடற்பயிற்சி இல்லை.. ரன்னிங் கூட செய்யல.. 21 நாளில் எப்படி உடலை குறைத்தேன்? - வியக்கவைத்த மாதவனின் டயட்!
Actor Madhavan : இந்திய சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பயணித்து வரும் பிரபல நடிகர் மாதவன், அண்மையில் தான் மேற்கொண்ட "பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன்" குறித்து பேசியுள்ளார்.

maddy
கடந்த 2000வது ஆண்டு, பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "அலைபாயுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகர் தான் மாதவன். ஆனால் அதற்கு முன்னதாகவே ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சில திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
Director Madhavan
மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல பல நடிகர்களில் மாதவனும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான "மின்னலே", "பார்த்தாலே பரவசம்", "கன்னத்தில் முத்தமிட்டால்" மாற்றும் "ரன்" போன்ற திரைப்படங்கள் தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் மிகா ஹிட் வெற்றி திரைப்படங்களாக மாறியது.
actor Madhavan
கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்து வரும் நடிகர் மாதவன், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சில திரைப்படங்களை அவர் இயக்குவதும் உண்டு. இப்போது பெரிய அளவில் ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் மாதவன், தான் எவ்வாறு தனது உடலை Transform செய்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். மாதவன் தனது Rocketry திரைப்படத்தை இயக்கி நடித்தபோது, படத்திற்காக அதிக அளவில் எடை கூடியது குறிப்பிடத்தக்கது.
Madhavan
உணவு உட்கொள்ளாமல் வயிற்றை அவ்வப்போது காயப்போட கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய மாதவன். தான் உண்ணும் உணவுகளை குறைந்தது 45 முதல் 60 முறை நன்றாக மென்று தான் உண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். ஒரு நாளில் இறுதியாக நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அப்போது மணி மாலை 6:45 ஆக இருக்க வேண்டும். அதுவும் சமைத்த உணவாக மட்டுமே இருக்க வேண்டும். சமைக்கலாம் எதையும் உண்ணவேண்டாம்.
முடிந்தால் காலையில் நெடுந்தூரம் நடந்து பழகுங்கள், இரவு உறங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே உங்கள் செல்போன்களை மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களை தூரத் தள்ளி விடுங்கள். அதிக அளவில் பச்சை காய்கறிகளை மதிய வேளையில் எடுத்துக் கொள்ளுங்கள், இதுவே என் உடலை மாற்றியதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார் அவர்.
Genelia : "அவளே என் காதல்" ஆனந்த கண்ணீரில் மிதந்த ஜெனிலியா - வெளியான அவருடைய Unseen திருமண பிக்ஸ்!