இரண்டு பேர் தான் போகலாம்.. ஆனால் உலகின் காஸ்டலியான கார் இது தான் - அப்படி என்ன கார் அது? எத்தனை கோடி தெரியுமா?
Worlds Costliest Car : உலக அளவில் சொகு கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பல உள்ளது. அதிலும் குறிப்பாக இருவர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் கார்களும் உண்டு.
Rolls Royce Car
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் என்றாலே நமக்கு முதலில் மனதில் வருவது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தான். பழமை வாய்ந்த இந்த கார் நிறுவனம் தான் இப்பொது உலகில் மிகவும் அதிக விலை கொண்ட அந்த இரண்டு பேர் செல்லும் காரை வடிவமைத்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் Sweptail, Boat tail மற்றும் Drop Tail என்ற மூன்று வெவ்வேறு வகை கார்களை விற்பனை செய்து வருகின்றது.
RR Droptail
அதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான Droptail வகையை சேர்ந்த Rolls-Royce La Rose Noire Droptail என்ற கார் தான் இப்பொது உலகின் மிகவும் காஸ்டலி காராக திகழ்ந்து வருகின்றது. அதே போல இந்த நிறுவனத்தின் Boat Tail கார்கள் தான் உலகின் இரண்டாவது விலை உயர்ந்த கார்கள் என்பதும் குறிபிடத்தக்கது. ஆனால் அதில் 4 பேர் பயணம் செய்யலாம்.
RR Droptail Price
சரி அந்த Droptail காரில் அப்படி என்ன உள்ளது என்று பார்த்தால், மொத்தம் 1,603 பாகங்களை கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை உலகில் 4 பேர் மட்டுமே இதை வாங்கியுள்ளார்களாம். 6.75 லிட்டர் V12 இன்ஜின் கொண்ட இந்த கார், 563 குதிரைத்திறனை உற்பத்தி செய்யுமாம். சரி இதன் விலை என்னவென்று பார்த்தால், இந்திய மதிப்பில் சுமார் 246 கோடியாம்.