Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி.. எம்ஆர்ஐ ஸ்கேனில் அதிர்ச்சி ரிப்போர்ட்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர் தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
senthil balaji
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து புழல் சிறையில் கடந்த ஜூலை மாதம் அடைக்கப்பட்டார். பலமுறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிறை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு தொடர் தலைவலியை அடுத்து எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதில், செந்தில் பாலாஜிக்கு மூளையில் உள்ள நரம்பில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டியை ஆபரேஷன் மூலமாக அகற்றலாமா அல்லது மருந்துகள் மூலமாகவே கரைக்கலாமா என மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, கழுத்து சவ்வும் பாதிக்கப்பட்டிருப்பதால் செந்தில் பாலாஜிக்கு பின் கழுத்தில் வலி ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை இரண்டையும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.