- Home
- Gallery
- கோலிவுட் நாயகி ரவளியை ஞாபகம் இருக்கா? இப்போ எங்க இருகாங்க? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போய்ட்டாங்கபா!
கோலிவுட் நாயகி ரவளியை ஞாபகம் இருக்கா? இப்போ எங்க இருகாங்க? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போய்ட்டாங்கபா!
Actress Ravali : ஆந்திராவில் பிறந்து, மலையாள சினிமாவில் நடிக்க துவங்கி, பிறகு தமிழில் வெளியான "பட்டத்து ராணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் ரவளி.

Actress Ravali
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த், மூத்த நடிகர் சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நல்ல பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ரவளி. கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்தின் "திருமூர்த்தி" என்கின்ற திரைப்படம் இவருக்கு தமிழ் திரை உலகில் மாபெரும் வரவேற்பை கொடுத்தது.
Ravali
அதனைத் தொடர்ந்து தமிழில் வெளியான "பெரிய மனுஷன்", "அபிமன்யு" மற்றும் "புத்தம் புது பூவே" போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில ஹிந்தி திரைப்படங்களிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
Ravali latest photos
இந்த சூழ்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நீல கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவளி, அதன் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் கடந்த 2011ம் ஆண்டு வரை தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள், கணவர் என்று தனது வாழ்க்கையை நகர்த்தி வரும் நடிகை ராவளி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தற்பொழுது மாறியுள்ளார்.
EXIT Teaser: பசங்க பட குழந்தை நட்சத்திரம் ஸ்ரீராம் ஹீரோவாக நடிக்கும் எக்ஸிட் பட டீசர் வெளியானது!