- Home
- Gallery
- கமலை உதாசின படுத்திய ஸ்ரீவித்யா.! இருவருக்கும் நடந்த பிரச்சனை இதுதான்? திடீர் முடிவால் திசைமாறிய வாழ்க்கை!
கமலை உதாசின படுத்திய ஸ்ரீவித்யா.! இருவருக்கும் நடந்த பிரச்சனை இதுதான்? திடீர் முடிவால் திசைமாறிய வாழ்க்கை!
நடிகை ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசன் இருவரும், ஒருவரை ஒருவர் உயிருக் உயிராக காதலித்த நிலையில், இருவரும் ஏன் பிரிந்தோம் என்கிற தகவலை ஸ்ரீவித்யா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Srividya debut movie
தன்னுடைய 14 வயதில், தமிழில் வெளியான 'திருவருட்செல்வர்' என்கிற படத்தில், ஒரு டான்சராக சினிமா கேரியரை துவங்கியர் தான் நடிகை ஸ்ரீவித்யா. இவருடைய தந்தை தமிழில் சில திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய தாயார் பாரம்பரிய கர்நாடகா பாடகியான எம்.எல்.வசந்தகுமாரி. ஸ்ரீவித்யாவின் தந்தை, திடீர் என முக தசைகளை பாதிக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட, ஸ்ரீவித்யா பிறந்த கையோடு நடிப்பில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. இதனால் குடும்ப நிதி நெருக்கடி காரணமாக, ஸ்ரீவித்யாவின் தாயார் வசந்தகுமாரி தான் முழு குடும்ப பொறுப்புகளையும் தன் தோள் மீது சுமக்க துவங்கினார்.
Srividya family details:
ஸ்ரீவித்யாவுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்த நிலையில், குழந்தைகளுக்காகவும், கணவரின் மருத்துவ செலவுக்காகவும் இடைவிடாமல் உழைக்க துவங்கினார் வசந்தகுமாரி. அம்மாவை போல் கர்நாடக பாடல், பரதம், போன்ற கலைகளில் கைதேர்ந்த ஸ்ரீவித்யாவுக்கு, ஆரம்பத்தில் ஒரு டான்சராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தாலும், பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்தார்.
தளபதி விஜய் என்னை அழைத்தால் அவரின் TVK கட்சியில் இணைய தயார்! இயக்குனர் அமீர் அதிரடி பேட்டி!
Kamal and Srividya pair in Aboorva ragangal:
தமிழில் நடிகை ஸ்ரீவித்யா கமல்ஹாசனுக்கு ஜோடியாக, 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்த போது, தன்னை விட வயதில் சிறியவராக கமல்ஹாசனை காதலிக்க துவங்கினார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில்... எதனால் இருவரின் காதலும் திருமணத்தில் முடியாமல் பிரிந்தது என்பது குறித்து, நடிகை ஸ்ரீவித்யா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Kamalhaasan and Srividya love
மலையாள சேனலுக்கு கொடுத்த அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, "கமல்ஹாசனும் நானும் காதலித்தோம். அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரகசியமில்லை. திரைத்துறையில் உள்ள அனைவருக்குமே இது தெரியும். கமலுடைய தந்தையாருக்கு என் மீது அதிக அன்பிருந்தது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்.
இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரக்கடித்துக்கொண்டு... கையில் சைடிஷுடன் மது பிரியர்களுடன் அட்வைஸ் கூறிய ஓவியா!
Srividya mother Advise:
ஆனால் சில வருடங்கள் காத்திருக்கும்படி கமல்ஹாசனிடம் என் அம்மா வேண்டுகோள் விடுத்தார். "அவர் உங்கள் இருவருக்கும் 21 வயதுதான் ஆகிறது. கமல் மகா நடிகனாக ஆக வேண்டியவன். ஸ்ரீவித்யாவும் அப்படி தான். திரைத்துறையில் நீங்கள் அடைய வேண்டிய உயரமும், போக வேண்டிய தூரமும் அதிகம். அப்படி பெரிய நடிகர்களாக ஆகையில் உங்கள் இருவருக்குமே வேறு வேறு ஆட்கள் மீது காதல் வரலாம். ஒரு நான்கைந்து வருடங்கள் காத்திருங்கள். அதன் பின்னரும் உங்களுக்குள் காதல் இருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்''என்று கமல்ஹாசனிடம் அம்மா அறிவுறுத்தினார்.
Kamal Marry to Vani Ganapathy:
ஆனால் கமலுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லையாம். ஸ்ரீவித்யா தன்னுடைய தாயார் பேச்சை மீர முடியாத நிலையில், இது கமலுக்கு ஸ்ரீவித்யா மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் கமல் ஸ்ரீவித்யாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். தனக்காக கமல் காத்திருப்பார் என்கிற நம்பிக்கையில் ஸ்ரீவித்யா தன்னுடைய சினிமா வளர்ச்சியில் கவனம் செலுத்த, கமல் சிறிது காலத்திலேயே வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம்.
Sri vidya marriage:
நிறைவேறாத தன காதலை எண்ணி ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருந்த ஸ்ரீவித்யா, பல சமயங்களில் என்னை விட அந்தப் பெண்ணிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ? நான் எதில் குறைந்தேன் ? என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டாராம். அந்த வலியில்தான், எதையும் யோசிக்காமல், என்னை விரும்புகிறேன் என்று சொன்ன மலையாளத் தயாரிப்பாளர் ஜார்ஜ் என்பவரை யோசிக்காமல் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் அந்த திருமணமும் தோல்வியடைந்ததாக கூறியுள்ளார்.
Srividya last tamil movie:
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, 40 ஆண்டுகள் திரையுலகில் தன்னுடைய பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர். டான்சரில் துவங்கி கதாநாயகி, அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவர் தமிழில் கடைசியாக நடிகர் பிரசாந்துக்கு பாட்டியாக 2005 ஆம் ஆண்டு வெளியான லண்டன் படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் தொடர்ந்து உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த இவருக்கு, முதுகெலும்பு புற்றுநோய் இருப்பது நான்காவது நிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த இவர், 2006 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
லூஸ் ஹேரில்.. எடுப்பான சேலையில் - கவர்ச்சி அலை வீசிய ஐஸ்வர்யா தத்தா!
Srividya Diagnosed Cancer:
புற்றுநோயால் நடிகை ஸ்ரீவித்யா பாதிக்கப்பட்ட போது, திரைப்பட கலைஞர்கள் பலர் இவரைப் பார்க்க ஆவலாக இருந்த போதும்... நடிகர் கமல்ஹாசன் மட்டுமே சந்திக்க விரும்பினார். மற்ற யாரையும் தன்னுடைய முகத்தை பார்க்க அவர் அனுமதிக்கவில்லை. மேலும் தன்னுடைய சொத்துக்களை தன்னிடம் வேலை பார்த்தவர்கள் மற்றும் நலிந்த கலைஞர்கள், ஆதரவற்றோருக்கு கொடுத்துவிட்டு சென்றார். நடிகை ஸ்ரீவித்யா சிறந்த நடிகை என்பதை தாண்டி, மிகவும் அன்பானவர் என பலரும் கூறுவார்கள். இவரின் திரை உலக வாழ்க்கை மிகவும் வெற்றிகரமானதாக இருந்தாலும்,காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாமல் போனது குறிப்பிடத்தக்கது.