- Home
- Gallery
- என்ன பாடு படுத்தப்போறாங்களோ.. இந்தியில் ரீமேக் ஆகும் மகாராஜா; விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்?
என்ன பாடு படுத்தப்போறாங்களோ.. இந்தியில் ரீமேக் ஆகும் மகாராஜா; விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்?
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த மகாராஜா படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

vijay sethupathi
ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதில் தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்து நடிப்பவர் தான் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் ஆவார்.
maharaja movie
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் கஷ்யப், சிங்கம் புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்தில் சர்ப்ரைஸாக இருந்தது சிங்கம் புலியின் கேரக்டர் தான். இதுவரை பல திரைப்படங்களில் காமெடியனாக கலக்கிய சிங்கம் புலியை இந்தப் படத்தில் பலரும் வெறுக்கக் கூடிய அளவுக்கு டெரரான வில்லனாக காட்டி இருந்தார் நித்திலன்.
இதையும் படியுங்கள்... தளபதி விஜய் என்னை அழைத்தால் அவரின் TVK கட்சியில் இணைய தயார்! இயக்குனர் அமீர் அதிரடி பேட்டி!
Maharaja Hindi Remake
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பிய மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து ரூ.100 கோடி வசூலிக்கும் முதல் படம் இதுவாகும். தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் அண்மையில் ரிலீஸ் ஆன மகாராஜா திரைப்படம் அதிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக இந்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
Maharaja Hindi Remake rights bagged by Aamir Khan
இந்நிலையில், மகாராஜா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது. அப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் கைப்பற்றி உள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், மகாராஜா ரீமேக்கில் நடித்து அமீர்கான் கம்பேக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீப காலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த சூழலில் மகாராஜா படத்தின் ரீமேக் உரிமையை அமீர் கான் வாங்கி இருப்பது ரிஸ்க் ஆன முடிவு என்றே பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரக்கடித்துக்கொண்டு... கையில் சைடிஷுடன் மது பிரியர்களுடன் அட்வைஸ் கூறிய ஓவியா!