ஜெயம் ரவியின் தனி ஒருவன்.. முதலில் இந்த கதையை கேட்ட மாஸ் ஹீரோ யார் தெரியுமா? - உண்மையை உடைத்த மோகன் ராஜா!
பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் துவங்கப்படவுள்ளது.
Jayam Movie
கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர்தான் மோகன் ராஜா. தனது முதல் திரைப்படத்தில் தனது உடன் பிறந்த தம்பியான நடிகர் ஜெயம் ரவி அவர்களை தனது கதையின் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். உலக நாயகன் கமல்ஹாசன் கிளாப் அடித்து இந்த படத்தை துவங்கி வைத்தார்.
Nayanthara in Thani Oruvan
அதன் பிறகு தொடர்ச்சியாக தனது தம்பியை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா, கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் தனது தம்பி ஜெயம் ரவி அவர்களை வைத்து இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Siddharth Abimanyu
நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியான வில்லனாக நடித்திருந்தார் பிரபல மூத்த தமிழ் நடிகர் அரவிந்த்சாமி அவர்கள்.
Prabhas
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய மோகன் ராஜா, முதலில் தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு ஒரு கதை எழுத தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும். அப்பொழுது ஒரு காவல்துறை அதிகாரியின் கதையை எழுதி அதை அவரிடம் கொண்டு சென்றதாகவும், ஆனால் அப்பொழுது அவர் ரொமான்டிக் மட்டும் காமெடி வகைப் படங்களில் மட்டுமே நடித்து வந்தால் அந்த படத்தில் நடிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார். அந்த கதையை சில ஆண்டுகள் கழித்து தனது தம்பியை வைத்து தனி ஒருவன் என்ற தலைப்பில் வெளியிட்டதாகவும் அவர் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.